படத்துக்கான பா – 2

1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்
நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லா
பாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமது
மாதவன் தானுண்ட மண்

  • மாலா மாதவன்

2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சி
கலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?
பாதாதி கேசத்தில் அண்டம் அளந்திட்ட
மாதவன் தானுண்ட மண்!

  • சுரேஷ் பாபு

3 – கன்னலுடன் பாலும் கனிச்சாறும் சர்க்கரையும்
தென்னை இளநீருடனே தேன்கலந்த – இன்சுவையும்
மோதிடின் தோற்குமாம் முன்நிற்க! ஏதென்றால்
மாதவன் தானுண்ட மண்!

  • சுந்தர ராசன்

4 – வேதமெலாம் போற்றுமொரு வேதியன்
யாதவனாய்த் தரணியிலே வந்தமைக்குச்
சீதனமாய் நிலமகளுந் தந்ததுவோ
மாதவன் தானுண்ட மண்

  • சங்கர் குமார்

5 – குறும்பாய்க் குறுமுறுவல் கண்களிலும் தாங்கி
சுறுசுறுப்பாய்த் தேடிச் சுதானமாய் இட்டதால்
வாதஞ் செயாமலே வண்ணமாய் ஆனதுவே
மாதவன் தானுண்ட மண்

  • கண்ணன் ராஜகோபாலன்

6 – மாதவன் தானுண்ட மண்ணில்
மாதவம் செய்த யசோதை
மொத்த பூலோகமும் கண்டாள்,
அவதார மகிமை உணர்ந்தாள்.
பாலகன் வாயில் மண் கண்ட தாய்
பாதகம் ஏற்படும் என பதறினாள்.
சிறுவர்கள் குறும்பு ஒன்றேயெனினும்,
நாம் வாழும் காலம் கலியுகம் அன்றோ

  • கண்மணி பாண்டியன்

Author

Related posts

பாட்டுக்கு பா! -3

நல்லாச்சி – 2

பண்புடன் குறுக்கெழுத்துப் புதிர் – 2