தனிமை உணர்வு மிகக் கொடூரமானது. மிகக் கொடூரமான குற்றங்களுக்கு தனிமைச் சிறைகள் உச்சக்கட்ட தண்டனையாக வழங்கப்பட்டன. அப்படி இருக்கும் போது சாதாரண நடைமுறை வாழ்க்கையில் நம்மை நாமே தனிமைப் படுத்திக்கொள்வது எத்தனை அபாயகரமானது?
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் …