தெலுங்கில் டாக்டர். எம். ஹரிகிஷன் அவர்கள் எழுதிய தெலு(ங்)கு நாட்டுப்புறக் கதைகளின் மொழியாக்கம்.
குள்ளன் ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, வெள்ளையாகக் கோழி முட்டை ஒன்று பளபளவென மின்னுவதைக் …