shanthy Mariyappan

முகவரிகளின் வாசனை

வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்மிதக்கும் என் பாதங்கள்நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போதுகாற்றோடு கரைந்துபோகிறதுஎன் ஆதி முகவரிகளின் வாசனை ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்காலம் தோல் உரித்துக் கொள்ளும்போதுஉதிர்ந்து விழும் என் நிழல்கள்யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தைதன் முகம் என நம்ப முயல்கின்றன வண்ணத்துப் பூச்சியின்…

Read more

நல்லாச்சி – 40

This entry is part 40 of 40 in the series நல்லாச்சி

நல்லாச்சி உறங்குகிறாள்சமையலறைப் பாத்திரங்கள் ஓசையின்றிசைகையில் பேசிக்கொண்டிருக்கதாழ்வாரம் வரை வந்துதயங்கி தவிப்போடு அமர்ந்திருக்கும்வெயிலின் தங்க நிறம்படிகளில் தேன்துளிகளாய்த் தேங்குகிறது பகலெல்லாம் ஓயாமல் உழைத்த களைப்பில்பாயில் சாய்ந்திருக்கிறாள் நல்லாச்சிஇறகுகளை மெல்ல விரித்த தென்றல்அவளுக்கு இதமாய் விசிறகாற்றில் கலைந்த நிழல்கள்பூனைக்குட்டியாய் அவள் காலடியில் முடங்குகின்றனமுற்றத்தில் விளையாடும்…

Read more

ஆகச்சிறந்த சுயநலமி

இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் கலந்துதன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தைமென்மையாக அறுத்துப்…

Read more

காவூ – ராமசந்திரன் உஷா( புத்தக மதிப்புரை)

நூல்: காவூஆசிரியர்: ராமசந்திரன் உஷாவெளியீடு: தேநீர் பதிப்பகம் வணிகவியல் பட்டதாரியான ராமசந்திரன் உஷா, வசிப்பது சென்னையில். சுமார் 40 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும் வெளியாகி உள்ளன. இரண்டு நாவல்களும் நாவல் போட்டியில் பரிசு வாங்கியவை. பல சிறுகதைகள் போட்டியில் வென்றுள்ளன. வாசிப்பதில்…

Read more

நல்லாச்சி – 39

This entry is part 39 of 40 in the series நல்லாச்சி

கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி…

Read more

வண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்

காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில்…

Read more

நல்லாச்சி – 38

This entry is part 38 of 40 in the series நல்லாச்சி

மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி…

Read more

ஒரு துளியின் துளிர்ப்பு

சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்மழைத்துளிகள்ராகம் பாடிச் செல்கின்றனசுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவிமனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தைபாட வைக்கிறது அந்தப் பெருமழை. சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களைஇயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லைகனிவுடன்அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறதுபேரழிவுக்குப் பின் நிகழும்பேரன்பின் துளிர்ப்பு அது சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கிஅவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்துமன்னித்தலின்…

Read more

நல்லாச்சி – 37

This entry is part 37 of 40 in the series நல்லாச்சி

சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம்…

Read more

நல்லாச்சி – 36

This entry is part 36 of 40 in the series நல்லாச்சி

சூறாவளி வரப்போவதாய்லேடியோப்பொட்டி அறிவித்த அன்றிருந்தேகலக்கமுற்றிருக்கிறாள் நல்லாச்சிஅறுவடைக்குத் தயாராயிருப்பவற்றிலிருந்துஅப்போதுதான் நட்டவை வரைக்கும்அத்தனையும் அபாயத்திலிருந்தாலும்நாணித் தலைசாய்ந்து நிற்கும்வாழைகள் மேல் அதிகக்கரிசனம் அவளுக்கு விளைந்த குலைகள் கனக்கநிறைமாத சூலிபோல் பொலிபவற்றைச்சூறாவளி சாய்க்குமோவென அஞ்சியவள்அஞ்சாறு பேர் துணையுடன் ஆளுயரக்கம்புகளால்ஓடியோடி முட்டுக்கொடுக்கிறாள்மூடிப்பொதிந்த வாழைக்குலைகளுக்கு.பாதுகாப்பின் அவசியத்தைப் பேத்திக்குஊடேஊடே பாடமும் எடுக்கிறாள்…

Read more