இதுவரைக்கும் பண்டமாற்று முறை பற்றியும் நாணயங்கள் தோன்றியதின் அவசியத்தை பற்றியும் சொல்லி இருந்தேன். நாணயங்கள் எப்படி ஒரு மனித சமூகத்தை ஒவ்வொரு நிலையாய் முன்னேற்றி கொண்டு சென்றது என்பதை பற்றி இனி சொல்லப் போகிறேன்.
அதற்கு முன்பு மனிதர்கள் எப்படி கூட்டமாக வாழ தொடங்கினார்கள், அப்படி கூட்டமாய் வாழ தொடங்கிய பொழுது என்ன மாதிரியான சட்டங்கள் நம்பிக்கைகள் உருவாகின என்பதை
பற்றி புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
ஏன் அவசியம். ?
முன்பே சொன்னதை போல் இன்றைய பொருளாதாரத்தின் வேர்கள் மனித நம்பிக்கைகள் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்கிறது அறிவியல்.
ஆனால் குரங்கில் இருந்து மனிதன் மட்டுமே தோன்றினான் என பலர் நினைத்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் மனித இனம் மட்டுமே தோன்றவில்லை. மனித இனத்தோடு மற்ற இனங்களும் தோன்றின. எல்லா இனங்களுக்கும் குரங்கு இனமே மூலம் என்பதால் பல ஒற்றுமைகள் இருந்தன.
மற்ற இனங்கள் யாவை ?* நியண்டர்தால்
* டெனிசோவன்
* ஓமோ இரக்டஸ்
* ஹோமோ சேப்பியன்ஸ்
இதில் ஓமோ இரக்டஸ் என்கிற இனம் தான் இன்றைய மனிதன் போல் நிமிர்ந்த நிலையில் தோன்றியவர்கள். இவர்களை தவிர்த்து இன்னும் சில பல இனங்கள் இருந்து உள்ளார்கள்.
நான் சொல்லி கொண்டு இருப்பது பொருளாதாரத்தின் வரலாற்றை பற்றி என்பதால் அறிவியலில் ரொம்பவும் போக வேண்டாம். நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான் மனித இனம் போன்று
மற்ற சில இனங்களும் இருந்தார்கள்.
அப்பொழுது எல்லா இனங்கள் தங்களை சார்ந்தவர்களை கூட்டம் சேர்த்து கொண்டு வேட்டையாடி கொண்டு இருந்தார்கள். ஒரே மாதிரியாக இருப்பதால் பயம் இல்லாமல் இருந்தார்கள். எல்லா இனங்களும் அவரவர்களென நில பரப்பை பிரிந்து கொண்டு வாழ்ந்து கொண்டு இருந்தார்கள்.
ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு மாதிரியான வலிமை பெற்று இருந்தார்கள். எல்லோரையும் விட ஹோமோ சேப்பியன்களுக்கு (அதாவது இன்றைய நவீன மனிதனின் முன்னோர்கள்) ஒரு ஆபத்தான
வலிமை ஒன்று இருந்தது. அது தான் யோசிக்கும் சக்தி.
மற்ற இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தி தனக்காக வேட்டையாடுகிற சுதந்திரத்தை நிறுவி கொள்ள தன் இன மக்களை ஒரே கூட்டமாய் சேர்க்க தொடங்கினான். அப்படி கூட்டமாய் சேர்ந்த பின்னர் மற்ற இனங்கள் மீது போர் புரிந்து வென்றான். மற்ற இனங்களை அடிமைகளாக வைத்து கொண்டு இருந்தானா என தெரியவில்லை.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் ஹோமோ சேப்பியன்களின் ஆதிக்கதால் மற்ற இனங்கள் அழிந்து போனது. கடைசி நிலை போர் என்பது நியண்டர்தால்களுக்கும் ஹோமோ சேப்பியன்களுக்கும் நடைத்திருக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இப்படியாக தான் ஆதி மனிதர்கள் கூட்டமாய் வாழ தொடங்கினார்கள். மற்ற இனங்களை அழித்த பின்னர் நமது முன்னோர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். சமூகம் எத்தகைய மாற்றங்களை சந்திக்க தொடங்கியது?
தொடரும்….