Home கட்டுரைநாள்: 21

நாள்: 21

by அருண்
0 comments

பாராட்டி வாய மூடல அதுக்குள்ள ஒரு சுமாரான நாள். அப்டி ஒண்ணும் சிறப்பா இல்ல. க்ளைமாக்ஸ வச்சுக்கிட்டு முன்னாடி எழுதுன மாதிரி…ஆதிரையோட எவிக்ஷன சொல்றதுக்கு முன்னாடி எதையோ இழுக்கனும்னு இழுத்த எபிசோட் இது. ஒரு ஸ்டாம்புக்கு பின்னாடி எழுதிடலாம்.

கனியோட கேப்டன்ஸி பத்தி கேட்டாங்க. சாதகமும் இல்லாம பாதகமும் இல்லாம 50-50 யா பதில் வந்துச்சு.

இங்க யாரு யாரோட நிழலா இருக்காங்கன்னு ஒரு கேள்வி. சராமாரியா பெரும்பாலானோர் பாரு & கமருதீன சொன்னாங்க. அதுக்கு ரெண்டும் ஒரு பிரேக்ல அது எப்டி எங்கள அப்டி சொல்லலாம்னு ஏறுச்சுங்க.

திவாகர பாடி ஷேமிங்க் பண்றது தப்பு. அப்டி பண்ணாதீங்கன்னு சொன்னாப்ல.

கமருதீன பத்தி பேசுனப்போ சுபி தன்ன பாத்தா பயமா இருக்குன்னு சொன்னதா கமருதீன் சொல்ல…அப்டி ஒரு வீடியோ க்ளிப் கடல்லயே இல்லயாம்னு விசே சொன்னாரு.

ஆதிரை அவுட். ஒரு இம்பாக்ட் ப்ளேயர சட்டுன்னு தூக்கிட்டானுங்க. அரோராலாம் என்ன ஸ்டார் ப்ளேயர்னு உள்ள வச்சிருக்கானுங்கன்னு தெரியல. ஆதிரையும் வெளிய போறவங்க பண்ற வழக்கமான சடங்கு “யாரு எப்டி?”ன்னு சொல்லிட்டு வரனும். சொல்லிட்டு வந்து, ஏவி பாத்துட்டு வெளிய போயிடுச்சு.

இன்னொரு பிரேக்ல விசேக்கு முன்னாடியே கமரும் – துஷாரும் கை ஓங்குறானுங்க. அத பாத்தும் பாக்காத மாதிரி விசே போறாப்ல. என்னன்னு ஒண்ணுமே புரியல. லைவ்ல பாத்தெல்லாம் பேச மாட்டாப்ல போல.

சனிக்கிழமை பரபரப்பா இருந்த எபிசோட், ஞாயித்துக்கிழமை சொத சொதப்பா போயிடுச்சு.

அப்பாடி இன்னைக்கு திங்கக்கிழமை.


Series Navigation<< நாள்: 16

Author

You may also like

Leave a Comment