நாள்: 9 தொடர்ச்சி & நாள் 10
இந்த சீசனோட வில்லன் வேற யாருமில்ல பிக்பாஸ் எடிட்டர் தான். டெலிகாஸ்ட்டுக்கு இவர் கட் பண்றதெல்லாம் வீணா போன சீன்ஸா இருக்கு. லைவ்ல இருந்து கட் பண்ண சீன்ஸெல்லாம் இன்ஸ்டா, ஃபேஸ்புக்ல வருது. அதெல்லாம் சுவாரஸ்யமா இருக்கு. சம்பந்தமே இல்லாத உப்பு சப்பில்லாத சீன்ஸா தான் டெலிகாஸ்ட்ல இருக்கு. எடிட்டர மாத்துங்க பிக்கி சாஆஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
FJ-வும் ஆதிரையும் உக்காந்திருந்தாங்க
ஆதிரை: கோவமா இருக்கியா? டீ சாப்டுறியா?
FJ: டீ நல்லா இல்லேன்னுதான் கோவமா இருக்கேன்…மறுபடியும் டீ வேணூமான்னு கேக்குற?
ஆதிரை: அப்போ காபி?
FJ: நீ என்ன ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபி கடைய ஃப்ரான்சைஸ் எடுத்திருக்கியா? அப்ப இருந்து டீ வேணுமா? காபி வேணுமான்னு கரச்சல் பண்ற?
ஆதிரை: ஏன் பேபி எம்மேல கோவம்…என் மனசு ஃபுல்லா சோகம்
FJ: இப்ப உனக்கு என்னதான் வேணும்?
ஆதிரை: நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிறியா?
FJ: பத்து கோட்டிங் மேக்கப் போட்டாலும் நீ கேத்தரின் தெரசாவா ஆக முடியாது….வயசான அப்பறம் அன்னை தெரசாவா வேணும்னா மாறலாம்
ஆதிரை: அப்படி சொல்லாத…பேபி கோவப்படாத..என் கூடவே இரு…என் கூட ஜாலியா பேசு…
FJ: இதென்னடி கிண்டர் கார்டன் ஆயாகிட்ட சொல்ற மாதிரி? சரி விடு, இப்ப என்ன உங்கிட்ட கோவமா பேசக்கூடாதா? சரி பேசல//
அடுத்த பெஞ்சுல துஷாரும், அரோராவும். இவனுங்க எப்ப பிக்கப் ஆனானுங்கன்னு தெரியல. திடீர்னு அரோரா ஊடல்ல போயிடுச்சு. அது இப்போ FJ கிட்ட வந்து உக்காந்து ஓன்னு அழுகை. என்ன கருமம்னே தெரியல. இப்ப எல்லாரும் வந்து அரோராவ சமாதானப் படுத்துனாய்ங்க.
இப்ப துஷார் வந்து அரோராகிட்ட ஏதோ சமாதானப் படுத்துனான். அரோரா அவங்கிட்ட நீதான் இந்த வீட்டு தல..அதனால மனச அலபாய விடாதன்னு மோட்டிவேட் பண்ணிட்டு இருந்துச்சு.
காம்பவுண்டு சொவரு கட்டுன பீச்சு மாதிரி ஆகிடுச்சு பிக்பாஸ் வீடு.
10 வது நாள்
பாரு: என்னய சாப்ட விடாம பண்றதுக்கு உப்புப் போட்ட கஞ்சி ரெடி பண்ணியே, அத ஏன் ஃப்ரிட்ஜுல வச்சிருக்க? அத என்ன பண்ணப் போற?
கனி: (மை.வா: புனல எடுத்து உன் வாயில வச்சு அந்த கஞ்சிய ஊத்தலாம்னு இருக்கேன்) அதுல வடகம் போடுவேன். இப்டியே தொணத் தொணன்னு பேசுனா உன் வாயிலயே போடுவேன்
பாரு: ரைட்டு விடு, நான் வெஜ், உருளைக் கிழங்கு வேணும்.
கனி: நான் வெஜ் உருளைக் கிழங்கு உலகத்துலயே இல்ல
பாரு: ஓஹோ? நான் வெஜ் இல்ல. நான் வெஜ்!
கனி: ஏன் சொன்னதயே சொல்லிட்டு இருக்க? எனக்கு நல்லா கேக்குது
பாரு: என்ன நகைச்சுவையா? நான் வெஜ் அதாவது சைவம்
கனி: நான் வெஜ்னா அசைவம் தான லூஸு?
பாரு: அடியே என்ன வார்த்தைல விளையாடுறியா? நான் சைவம்
கனி: நானுந்தான் சைவம். சிவன கும்புடுவோம்
பாரு: நீ எவன வேணும்னாலும் கும்புடு. எனக்கு உருளைக்கிழங்கு வேணும்
கனி: நான் வெஜ் உருளைக் கிழங்கா?
பாரு: யம்மா தாயே, எனக்கு எதுவுமே வேணாம். ஆள விடு//
பாருவும், அரோராவும் வீட்ல உள்ள ஆண்களுக்கு அவங்களோட தோற்றத்த வச்சு மார்க் போட்டாங்க. பாரு ஒழுங்கா இந்த மாதிரி கண்டென்ட் எடுத்தா நமக்கும் பிபி ஏறாம இருக்கும் ஆனா அதால இருக்க முடியாது. இந்த கமருதீன் பய எல்லா பொண்ணுங்ககிட்டயும் பஸ்ல வாய் பேச முடியாதவங்க கார்டு குடுப்பாங்கள்ல அந்த மாதிரி டாவு கார்டு குடுத்து வச்சிருக்கான் போல. பாருவுக்கும் இன்னைக்கு பாயாசம் குடுக்குறாம்ப்பா! அவ டஸ்கி கலர் பிடிக்குமாம், அவ ஒரு மாடல் மாதிரி அழகா இருக்காளாம்…! அடேய் இன்னும் 5 நிமிஷத்துல அவ காஞ்சூரிங் பேயா மாறிடுவா அப்ப சொல்லு இதையெல்லாம்.
மாஸ்க் டாஸ்க் கன்டினியூ ஆச்சு. கண்டெஸ்டன்ட் ஓடுற வழியில நின்ன பாருவ சபரி மேல ஏறி நில்லுன்னு சொல்ல, “ நாங்க இங்க நிப்போம், அங்க நிப்போம் இல்ல இங்கயே பாய விரிச்சு மல்லாந்து படுப்போம் உனக்கென்ன? போவியா”ன்னு கேக்க, கனி அந்தப் பக்கமா இருந்து “ரூல்ஸ்ன்னு ஒண்ணு இருந்தா அத மதிக்கக் கூடாதுன்னு மந்திரிச்சு தாயத்து எதுவும் கட்டி இருக்கியா? போயி நில்லுடி அங்குட்டு”ன்னு கதறுச்சு.
பிக்கிக்கு போரடிக்குதுன்னு பாரு, கெமி, வினோத்து 3 பேரையும் மாஸ்க் டாஸ்க்குல Defenders-ஆ சேத்துக்கிட்டாரு.
இங்கயும் பாரு FJ கிட்ட உரண்டை இழுத்து “நீ அடிச்சிருவ, கடிச்சிருவ, நீ ஆம்பளத் தனத்த காமிக்குற”ன்னு அதுவா கத்திட்டு இருந்துச்சு.
டாஸ்க்க முடிச்சுட்டு உள்ள வந்தானுங்க. பாரு இந்த வாட்டி உருளக்கிழங்க கனி கிட்ட கேக்காம கலைய கரெக்ட் பண்ணி உருளைக்கிழங்கு கிரேவி பண்ண சொல்லுச்சு. இதப் போயி FJ ரம்யா கிட்ட “உங்க ஹவூஸ் ஆளுங்க தனி தனியா ஐட்டங்களா கேட்டா காய் கறியெல்லாம் சீக்கிரம் தீந்து போகும். பாத்துக்கோங்க”ன்னு சொல்ல. “பாரு இந்த ஹவுசுக்கு வந்ததுல இருந்து எங்க நிம்மதிக்கே நிம்மதி இல்லாம போச்சு. எப்ப எங்க எவன் கூட பஞ்சாயத்து இழுத்துட்டு வருவான்னு வயித்துல நெருப்பக் கட்டிட்டு இருக்க வேண்டியதா இருக்கு”ன்னு பொலம்புச்சு.
கலையும் பாருவும் தனியா பேசிட்டு இருந்தாங்க. அதிசயமா வாட்டரு மிஸ்ஸிங். சார் நேத்துல் இருந்து பாருகிட்ட இருந்து தள்ளி இருக்காப்ல. இந்த கலைய கவனிச்சீங்களா? X-Men wolverine கெட்டப்ல இருக்கான். இல்ல அவனுக்கு தாடியே இப்டிதான் மொளைக்குதா?
கலை: கனி தனியா ஒரு கேம் விளையாடுறாங்க போல
பாரு: எங்க? அங்கயும் போயி ஒரு பஞ்சாயத்த கூட்டுறேன்
கலை: அய்ய…நான் சொல்றது அவங்க ஸ்டார்ட்டஜிய
பாரு: இதத்தாண்டா நம்ம வாட்டரு கிட்ட சொன்னேன். அவன் சோத்துக்கு ஆசப்பட்டு கனிய நல்லவன்னு சொல்றாண்டா
கலை: அவங்களுக்கு வேற ஒரு முகம் இருக்கு
பாரு: என் கண்ணு, அப்டியே நான் பேசுற மாதிரியே இருக்கு. இனி நீதான்டா என் தளபதி. ஒரு முகம் இல்லடா அவளுக்கு 100 முகம் இருக்கு. அவ பேச்ச மத்தவன கேக்க வைக்குறா பாரு அதான் அரசியல், அவ என்ன சமச்சாலும் அத சாப்புட வைக்குறா பாரு அதுதான் அரசியல், தூங்குறப்போ கண்ண மூடிக்கிறா பாரு அதான் அரசியல் இப்டி பல அரசியல் பண்றா…சரி நீ என்ன பண்ற, அக்காவுக்கு மதியம் உருளைகிழங்கு செஞ்சு குடுத்த மாதிரி..இப்ப பசும்பால எடுத்து அத நல்லா காய்ச்சி, கொஞ்சூண்டு குங்குமப் பூ போட்டு எடுத்துட்டு வா பாப்போம்.
கலை: பால் எங்க இருக்குன்னு கனி கிட்ட தான் கேக்கணும்
பாரு: சரியாப் போச்சு போ…இப்போ என்னய பால் குடிக்க விடாம பண்ணா பாரு…அதான் அரசியல்//
சூப்பர் டீலக்ஸ் ஆளுங்க டிஸ்கஸன் பண்ணிட்டு இருக்குறப்போ வாட்டரும் வினோத்தும் ஜாலியா சண்ட போட்டுக்கிட்டானுங்க. இவனுங்க காம்பிநேஷன் வீடியோலாம் நல்லா இருக்கு. ஆனா எடிட்டர் இத ஷோல காமிக்கவே மாட்டேங்குறான்.
இருந்திருந்தாப்ல சுபிக்ஷா வெங்காயத்த எடுத்துட்டு உள்ள போயி வச்சுக்கிட்டா. என்னன்னு கேட்டா இவனுங்களுக்கு சமைக்கிறப்போ எவ்வளவு வேணுமோ அவ்வளவு குடுப்பானுங்களாம். இதக் கேட்டதும் விக்கல் நாங்க என்ன பிச்ச எடுக்க வந்துருக்கோமான்னு விக்கி விக்கி அழுதுட்டாப்ல. இந்தக் கலவரத்துல போன வாரம் சூப்பர் டீலக்ஸ் வீட்ல இருந்து யாரு நார்மல் ஹவுஸுக்கு போக விருப்பப்பட்டாங்கன்னு ஒரு பஞ்சாயத்து ஆரம்பிச்சு, அவனுங்களுக்குள்ள ட்விஸ்ட் ஆகிட்டானுங்க. அரோரா, ரம்யா, சுபி, வியான்னா இவங்களுக்குள்ள லடாய். “என்னடா இன்னைக்கு நம்மள விட எல்லாம் ஃபயரா இருக்காய்ங்க? நைட்டு நைஸா ஒரு வன்மப் போர கிளப்பி விட்டுட்டு குறட்டைய விடலாம்னு பாத்தா, இவிங்க முந்திக்கிட்டாய்ங்க”ன்னு பாரு யோசிச்சு நின்னுச்சு. ரம்யா ஒரே ஒப்பாரி. சரி இதுதான் சமயம்னு பிக்கி ரம்யாவ அது கதைய சொல்ல சொன்னாப்ல. சாப்பாடு கஷ்டம், சித்தி கொடுமை, காதல் தோல்வி, காதலன் கடன், காதல் தோல்வி, தன்னிலை அறிதல், காதல் தோல்வி, வாழ்க்கையில் ஜெயிக்க சபதம், காதல் தோல்வி, வாழ்க்கையில் ஜெயிப்பு, காதல் தோல்வி. இதுதான் ரம்யா கடந்து வந்த பாதை.//
இன்னும் நாம இவனுங்கள வச்சுக்கிட்டு இந்த ஷோவ கடக்கனும்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
56
previous post