அவள் நடக்கிறாள்

அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக்…

Read more

புத்தக மதிப்புரை – கல்பனா ரத்தன்

பெண்ணெழுத்து (1947-க்கு முன்) கட்டுரைகள் – தொகுதி 01 (தேர்வும் தொகுப்பும்) தி. பரமேசுவரி, க. அஸ்வினிகுமாரி பரிசல் புத்தக நிலையம் ஆதிக்காலம் முதல் பெண்கள் தன் மனதில் தோன்றுபவற்றை, தன்னைப் பாதித்தவற்றை ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்திருந்தனர். ஆனாலும்,…

Read more

தொழில் போட்டி

காலை விழித்தவுடன் பரபரப்புடன் வாட்ஸ் அப் குழுவைத்தான் திறந்து பார்த்தாள் சுஷ்மிதா. அது அவர்களுடைய ஊரின் பெண் தொழில் முனைவோர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பின் வாட்ஸ் அப் குழு. பெருநகரமும் அல்லாத சிறிய கிராமமும் அல்லாத நடுத்தரமான நகரம் அது.…

Read more

சமன்பாடில்லா சமவெளிப் பயணங்கள்: 8

This entry is part 8 of 11 in the series பயணக்கட்டுரைத் தொடர்

போவோமா சிங்கப்பூர் முனைவர் பட்டத்துக்காக ஆராய்ச்சிக்கான திட்டம் ஒப்புதல் பெற்றுவிட்டது. அப்போது எனக்கான ஊதியம் இந்திய மருத்துவக் கழகத்தில் இருந்து வந்தது. ஏன் நாமே இந்திய அறிவியல் கழகத்தில் ஒரு திட்டத்தை அனுப்பக்கூடாது? என நினைத்தேன். இளம் விஞ்ஞானிகளுக்கான நிதிக்கான அறிவிப்பு…

Read more

தனிமையின் தண்மை

தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை.

Read more

மருத்துவர் பக்கம் -18: HbA1c விரிவான பார்வை 

கடந்த மூன்று மாத காலத்தில், ரத்தக் குளுக்கோஸ் அளவுகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய உதவும் முக்கிய பரிசோதனை. நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிவதற்கு ஒரு சிறந்த பரிசோதனையாக (GOLD STANDARD) இன்றும் முன்நிற்பது இந்தப் பரிசோதனை என்றால் அது மிகையாகாது. HbA1C…

Read more

தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 9 – மொழியாக்கம்

அப்பாவிக்கு அடித்த அதிர்ஷ்டம் ‎தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒரு அப்பாவி இருந்தான். அப்பாவி என்றால் பெரியதாகப் புத்தி சுவாதீனம் இல்லாதவன் எனலாம். ஒருமுறை அவன் பிழைப்பு நடத்த ஏதாவது வியாபாரம் செய்யலாம் என்று துணி மூட்டையை…

Read more

சின்ன வேண்டுதல்

தமிழ்நாடெங்கும் பரந்து விரிந்திருக்கும் யோகிதா கோழி மற்றும் கால்நடைத் தீவன நிறுவனத்தில் உள்ள மாடுகள் எல்லாம் நன்றாகச் செளக்கியமாக இருந்து, உற்பத்தி செய்யும் பால், தயிர், வெண்ணெய் + கோழிகள் எல்லாம் சேவலுடன் சேர்ந்தோ சேராமலோ, இடும் முட்டைகள் முதலியவற்றையும், அவற்றுக்கான…

Read more

அசுரவதம் பாகம் 2 – (அத்தியாயம் 6: இரும்பு முகத்தினள்) 

This entry is part 27 of 31 in the series அசுரவதம்

கிரௌஞ்ச வனத்தின் அந்தப் பகுதி ஒரு அமானுஷ்யமான நிசப்தத்தில் உறைந்திருந்தது. அந்திப் பொழுது ஒரு குருதி படிந்த வாளைப் போலச் செந்நிறமாகத் தென்பட, அடர்ந்த மரங்களின் நிழல் கரிய நாகங்களைப் போல நிலத்தில் ஊர்ந்து கொண்டிருந்தது. அங்கே ஒரு பாறை இடுக்கின்…

Read more

அவளும் நானும்

நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாகதானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!

Read more