Home வட்டார வழக்கியல்அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3

அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3

by Sasi Dharani
0 comments
This entry is part 1 of 3 in the series கொங்கு வட்டார வழக்கு

#அரக்கியுடறது.

ஏனுங் மாமா இட்டாரி பூரா சரளா( மரம் அல்லது செடியோட காஞ்சு போன கிளைகள்)தொங்கிக் கெடக்குது.
எப்டி வண்டி,வாசி போறது.
தொங்கறதயாச்சும் அரக்கியுடலாம்ல ( வெட்டி உடறது or trim பண்றது)

( இட்டாரி. இரு புறமும் வேலி மரங்கள் அல்லது செடிகளால் சூழப்பட்ட ஒற்றையடிப் பாதை

வாசி – வழி )

இட்டாரில நானொருத்தந்தா பொழங்கறனா மாப்ள, நானேதா எப்பப்பாரு,போனாப்போவுது, நாம்பதான பொழங்கறம்னு நறுவுசு பண்ணி உடறன்.
ஒருத்தனும் அண்ணாந்து பாக்கற சோலி இல்ல. அதா இந்த தடவ நானுங் கண்டுக்குல.

( நறுவிசு – லேசாக / மென்மையாக / பதமாக )

போச்சாதுடுங்க. அறுவாளயும், கவையையும் கொண்டாங்க மாமா. ஆளுக்கு கொஞ்சமா அரக்கீருவோம்.

( நல்லா அரக்கியுடுங்கறது அழுத்தி தேய்ச்சு விடுங்கற அர்த்தத்திலயும் வரும்)

Series Navigationசீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3 >>

Author

You may also like

Leave a Comment