260
- குறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4
- அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3
- கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2
- சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3
- கொங்குவட்டார வழக்கு : 5 – சூரத்தனம்
- கொங்கு வட்டார வழக்கு -7: சொலோர்னு
- கொங்கு வட்டார வழக்கு -6: கங்கு
- கொங்குவட்டாரவழக்கு: 8 – கொசலம்
- கொங்கு வட்டாரவழக்கு – 13: அக்கோட்ட..
- கொங்கு வட்டாரவழக்கு – 12: சீசாக்கா..
- கொங்கு வட்டாரவழக்கு – 11: பொழையாக்குப்பா
- கொங்கு வட்டாரவழக்கு – 10: திடும்பம்
- கொங்கு வட்டாரவழக்கு – 9: கட்டாப்பு
ஏனுங்க்கா.. எங்குட்டு போய்ட்டு வர?
மாறம் பொண்டாட்டி தவறீட்டாளமா போ..
அட..
என்னாச்சு,நேத்து கோட பால் கொண்டுவந்தாளே சொசைட்டிக்கு..
பாத்து பேசிட்டு கோட வந்தனே..
நேத்து எல்லாங் கோயலுக்கு போயிறுப்பாங்களாட்ட இருக்குது டெம்பால,இவ சொல்ல சொல்ல கேக்காம கங்குலயே ( ஓரத்துல) உட்கார்ந்துருக்கறா,எப்படியோ தவறி கீழ உழுந்துட்டாளாமா.. ஆஸ்பத்திரி போவ போவ உசுரு போயிறுச்சாமா..
அடப் பேரெழவே.
சவத்த கொண்டுவந்துட்டாங்னா சொல்லு போயிட்டு வந்துருவம்.
பி.கு: கங்குனு, தீ எறிஞ்சவாட்டி கெடைக்கற தணலயும் சொல்வாங்க.