அறிவே அனைத்துமாக

விரையும் காலத்தின் ஓட்டத்தில்
விரும்பும் தேவைகளும் அதிகரிக்க
கற்கும் கல்வியின் நோக்கத்தால்
கருத்தினில் கூடிடும் மாற்றங்கள்.

கல்வியின் முறைகள் மாறிடவே
கற்பிக்கும் திறன்களில்
கலந்திடும் புதுமைகள்.

புதுமைகளின் வரவால்
கூடிடும் கவனத்தில்
படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே.

புரிதல் காட்டும் பாதையிலே
செயலின் தாக்கம் நீண்டிடுமே.
செய்முறை காணும் களத்தினிலே
படைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே.

படைப்பும் பண்பும் கரம்சேர
அனுபவம் பேசும் அணுகுமுறை
அணுகுதல் பெருக்கும் ஆசிரியரால்
மாணவர் மனசும் மகிழ்வுறுமே.

மகிழ்வில் நிறையும் கல்வியிலே
மாற்றத்தின் விதைகள் விளைந்திடுமே
ஆற்றல் பெருகும் சமூகத்தில்
அறிவே வல்லமை என்றாகும்.

Author

  • கி. சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர்  அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர். பிறப்பு  திண்டுக்கல் மாவட்டத்தில் பழநிக்கு அருகில் அய்யம்பாளையம். இருப்பு  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் நரசிங்காபுரம். இவரது கவிதைகள் ஆனந்த விகடன், கணையாழி, கொலுசு, புன்னகை,  ஏழைதாசன், தமிழ்ப் பல்லவி, தினத்தந்தி, தினபூமி, மனித நேயம், புதிய உறவு, புதிய ஆசிரியன், உரத்த சிந்தனை, வானவில்,பொற்றாமரை போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. நூல் விமர்சனங்களில் நிறைய பரிசுகளைப் பெற்றுள்ளார். பல்வேறு இணைய இதழ்களில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல் விமர்சனக் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. 1.மின்மினிகள்(1999)
    2.தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022)
    3.தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது)
    4.அன்பு மொழி(2024)
    5.மீன் சுமக்கும் கடல் (2025)
          என   ஐந்து கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
    கோவை மேன்மதி மன்றம் இவருக்கு "தாய்த் தமிழ் காவலர்" விருது வழங்கி சிறப்பித்துள்ளது. பல்வேறு அமைப்புகள் நடத்திய கவியரங்கங்களில் கலந்துகொண்டு கவி பாடியுள்ளார். உடுமலை இலக்கியக் களம் என்ற அமைப்பின் செயலாளராகப் பணிபுரிகிறார்

Related posts

எட்டுத் திக்கும் கட்டியெழுப்பும் | ஸ்ரீதர் நாராயணன்

பேசும் சித்திரங்கள் | கிங் விஸ்வா

தொடரும் மாயவசீகரம் | விவேக் ஷான்பக்