ஏனுங்கா காடெல்லாம் ஒழவோட்டியாச்சா. இல்ல கண்ணு,நேத்து பேஞ்ச மழ கனமா போச்சு,ரண்டு நாளு காடு காஞ்சாதா ஒழவோட்டோனும்.. அடக்கெரவத்த, அக்கோட்ட ( அந்தப்பக்கம்) மழையே இல்லைங்கா.. மேகங்கண்ட பக்கம் பேஞ்சுட்டு போயிறுமாட்ட போ.. அதாம் பாருங்க. இங்க ஈரங்காயோனுங்கறீங்க. அக்கோட்ட காடு …
Sasi Dharani
ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க …
பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க.. கெடக்குதுடுங்கத்த.. அந்த வயில்ல …
அத்த பெரியவனுக்கு சாதகம் வந்துதுல்ல கருக்கம்பாளையத்துல இருந்து,நேத்துதா போயீ நம்ம சென்னிமலாபாளத்து குட்டிப்பவுண்டர்ட்ட பாத்துட்டு வந்தம் நல்லாருக்குதுனு சொன்னாங்க.. பொண்ணூட்டலயும் நல்லாருக்குதாமா.. எல்லாம் விசாரிச்சும் நம்ம குமாரு சொல்லிட்டான்,குடும்பமெல்லாம் நல்ல குடும்பம்னு.. நானும் கருக்கம்பாளையத்து நங்கைட்ட கேட்ட அவுங்களும் அருமையா பண்ணலானு …
கட்டாப்பு போன கட்டாப்பு ( தடவை) வந்தப்பவே சொல்லியுட்டன்ல சம்பா, அடுத்த கட்டாப்பு வரப்ப கருப்பட்டி கொண்டு வந்து குடுனு.. நாம கேட்டமுனுதாங் அஞ்சாறு சில்லு கொண்டுவந்தனுங்,வரப்ப தெம்பரமா வில்லையூட்டுகாரங்க நின்னாங்கனு பேசிட்டு வந்தனுங்ளா, என்ன சம்பா கருப்பட்டியானு, தனக்கு வேணும்னு …
#கொசலம் புதுக்காட்டு வளுவு சென்னீப்பம்பய ராசுக்கு கல்யாணம் உறுதியாவறாப்ல இருந்துருக்குது.இந்த சீமையே தேடி இப்பத்தா பொண்ணு படுஞ்சு வருமாட்ட. அதையப் பொறுக்காம கொள்ளுகாட்டய்யம் பய நடுவளுவானிருக்கான்ல அவம் போயி புள்ளையூட்ல கொசலம் (காசிப்) வெச்சு கல்யாணத்தயே நிறுத்திப்போட்டான். அந்த கூடப்போட்ட காசி …
சொலோர்னு. மரகதத்தை ஊட்லதான் நாங்க சிறுசுக(கொழந்தைங்க) அத்தன பேரு ஒன்னா வளந்தோம்.ஓரியாட்டம் ( சண்டை) போட்டுகிட்டு,அத்தன குஷியா போகும் லீவு நாளெல்லாம்.மாமாக்கு ஒடம்பு சரியில்லாம போனதுல அங்க சூழல் மாறி,யாருமே அங்க வர்றதில்ல இப்ப.ஊடே சொலோர்னு (வெறுமையா)கெடக்குது இப்ப. ஊட்ல சிறுசுக …
ஏனுங்க்கா.. எங்குட்டு போய்ட்டு வர? மாறம் பொண்டாட்டி தவறீட்டாளமா போ..அட.. என்னாச்சு,நேத்து கோட பால் கொண்டுவந்தாளே சொசைட்டிக்கு..பாத்து பேசிட்டு கோட வந்தனே.. நேத்து எல்லாங் கோயலுக்கு போயிறுப்பாங்களாட்ட இருக்குது டெம்பால,இவ சொல்ல சொல்ல கேக்காம கங்குலயே ( ஓரத்துல) உட்கார்ந்துருக்கறா,எப்படியோ தவறி …
வா வள்ளிக்கா… எங்க மேக்க இருந்து வர.. மேவரத்து காட்டுல, மழ பேஞ்சதுக்கும் அதுக்கும் பில்லு மொழங்கால் வளத்திக்கு கருகருனு கெடக்குது.அதா எருத ஒரு கட கட்டீட்டுவரலானு போன. வெயிலுக்கு மிந்தி, வளத்திக்கவற போட்டு கட்டீட்டா வவுறு நம்ப மேஞ்சுக்கும்.. ஆமா …
எதுக்கு ,இந்த முக்கு முக்கற,யாரு செவுடா கெடக்கறாங்கனு.. மாமனுமு,சித்தப்பனுமு சரியான சண்ட,மேவரத்துக்காட்ல,அதாஞ் சொல்லலானு ஒடியாந்த..
- 1
- 2