1
நானென்ற தன்மை நாமென்ற படர்க்கையாக
தானென்ற நிலையை தகர்த்திட்ட அன்பினால்
உள்ளத்தே நிறைத்து உறவாக்கி நிலைக்கும்
தெள்ளிய வகையில் தெரிவித்த கண்களில்
கலந்திட்டோம் நாங்கள் காட்சி ஒன்றாய்
அவளும் நானும் அகத்தில் ஒத்ததாய்!