ஹாய்.. நான் சைந்தவி. முதலில் என் கண்களில் தெரிவது என்ன? ஒரு விஸ்தாரமான டேபிள்.. அதன் ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடக்கும் லேப் டாப்.. அருகில் பவர் பேங்க்கில் போடப்பட்டிருக்கும் செல்ஃபோன். நல்ல அகல நீளமான அந்த மேஜையின் நடுப்புறம் நான்கு ரைஃபிள்கள் …
இதழ் – 8
மருத்துவர் பக்கம் -14: ரியூமடாய்ட் ஆர்த்ரைட்டிஸ் அ முதல் ஃ வரை
முடக்கு வாதம் தற்போதைய காலகட்டத்தில் 30 முதல் 60 வயதுக்குள் இருக்கும் மக்களுக்கு முடக்கு வாத நோய் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. இதைப் பலரும் எலும்புத்தேய்மான நோய் என்றே எண்ணி நாட்களைக் கடத்தி வருவதையும் காண முடிகின்றது. Osteo arthritis என்பது …
தமிழே! அமிழ்தே! -7 மிகவும் அறியப்பட்ட புதின எழுத்தாளரின் நூல் ஒன்றை நண்பர் அன்பாய் அளித்தார். திறந்து படிக்கத் தொடங்கிய எனக்கு முதற்பத்தியிலேயே வாசிப்பு இடறியது. காரணம், அத்தனை ஒற்றுப்பிழைகள் மலிந்திருத்தன. நண்பர் என் முகக் குறிப்பை உணர்ந்து காரணம் கேட்டுவிட்டு …
விரையும் காலத்தின் ஓட்டத்தில்விரும்பும் தேவைகளும் அதிகரிக்ககற்கும் கல்வியின் நோக்கத்தால்கருத்தினில் கூடிடும் மாற்றங்கள். கல்வியின் முறைகள் மாறிடவேகற்பிக்கும் திறன்களில்கலந்திடும் புதுமைகள். புதுமைகளின் வரவால்கூடிடும் கவனத்தில்படிப்பின் புரிதல் உயர்ந்திடுமே. புரிதல் காட்டும் பாதையிலேசெயலின் தாக்கம் நீண்டிடுமே.செய்முறை காணும் களத்தினிலேபடைப்பவர் வாழ்வியல் வளர்ந்திடுமே. படைப்பும் பண்பும் …
தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் கோட்டகொண்டா திறமைசாலி நம் கர்னூல் ஜில்லாவில் கோட்டகொண்டா என்ற ஓர் ஊர் உள்ளது. அந்த ஊரில் ஒரு திறமைசாலி இருந்தான். அவன் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு, சுருட்டு மீசை, சிங்கம் மாதிரி …
காவிரியில் இருந்து ஜம்னாவுக்கு முதன்முதலில் அண்ணன் புதுதில்லிக்குப் படிக்கச் சென்றபோது இருந்த பயமும் ஒருவித அச்சமும், நான் புதுதில்லிக்குச் செல்ல ஆயத்தமான போது இல்லை என்பதுதான் உண்மை. அம்மா, அப்பா இருவருக்குமே புதுதில்லியைப் பற்றி தெரிந்திருந்தது; அண்ணன் ஐஐடியில் படித்தபோது விடுமுறைக்கு …
தண்டகாரண்யத்தின் பசுமைப் போர்வைக்கு மேலே, நீலக்கடலென விரிந்திருந்த ஆகாயத்தில் அந்த அதிசயம் நிகழ்ந்து கொண்டிருந்தது. தனக்கு மனிதர்களைத் தவிர யாராலும் அழிவில்லை என்ற மமதை தலைக்கேறியதால், வலியச் சென்று போரிட்டு குபேரனிடமிருந்து பறிக்கப்பட்டதும் தேவசிற்பி விஸ்வகர்மாவினால் வடிக்கப்பட்டதுமான அந்த புஷ்பக விமானம், …
மருத்துவர் பக்கம் -13: டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு
பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கும். பெற்றோர்களையே ரோல் மாடல்கள் என்று …
அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன.
புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்ஆசிரியர்: அ. கரீம்வகை: கவிதைத் தொகுப்புபதிப்பகம்: மௌவல் பதிப்பகம் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான். அதிகாரத்தின் அத்துமீறல்களைக் கண்டு, இயலாமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் …