இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, மோதல்களை, கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, உள்ளடக்கிய …
இதழ்கள்
தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி! 2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. உலகின் தலைசிறந்த Go விளையாட்டு வீரர் …
எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த பிரியத்தின் மழைத்துளி! அதன் கண்ணாடி மோன உடல் மிதந்தலைந்தது எங்கெங்கே!
நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா பிள்ளையின் இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு.
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் …
டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் அழகு மேலும் தனித் தன்மையோடு மிளிரக்காரணம் …
மம்தானியின் எழுச்சி அதிவிரைவாகவும் மேல்நோக்கியும் மடமடவென வளர்ந்தது. டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிகார வர்க்கத்தில் பலர், மம்தானி யார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். நவம்பர் 4ஆம் நாள் தேர்தலில் நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மம்தானி. …
பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் பேச்சாளராக, பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழ் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கும் அமைப்பாளராக, 73 நாடுகளுக்கு பயணம் செய்து , 193 விருதுகளை வென்று, 40 புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் …
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி. கண்களில் கவலை. “என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”