பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப் பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார். பரமசிவம் அந்த ஊருக்கு நாட்டாமை என்பதால், …
சிறுகதை
“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் திட்டம். இரண்டு ஆண்டுகளுக்குமுன் ஒரு திருமண …
“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும் …
‘திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!’ என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில்.
நல்ல கஜல் வரிகள் கிடைத்தால் போதும், உம்ராவ் அதை முணுமுணுத்துக்கொண்டே நிலையில் சாய்ந்திருந்து சுட்டு விரலில் என்னைச் சுற்றிச்சுற்றி அவிழ்ப்பாள். பம்பரத்தில் சாட்டையைச் சுற்றுவதுபோல் அடுக்கடுக்கான வரிகளாக இல்லாமல் கோணல்மாணலாக இருந்தாலும் அழகாக இருப்பேன், சுற்றப்படுவது அவள் விரலில் அல்லவா. கடைசிச் …
பாதி ஒளியிலும் பாதி இருட்டிலுமாக மூழ்கிக் கிடந்தது அந்தப் பேருந்து நிறுத்தம். அதற்கு நேர் மேலே கிட்டத்தட்ட நீல நிறமாயிருந்த நிலா வானில் மிதந்து கொண்டிருந்தது. சன்னமாகத் தூறிக் கொண்டிருந்தது மழை. கூரையின் கீழ் எதிரெதிர் முனைகளில் அவர்கள் நின்றிருந்தார்கள் – …
“கதவு திறந்து தான் இருக்கு. வா”**வாயை நன்றாகத் திறந்து கொஞ்சம் பின்பக்கத்தைச் சுருக்கி சாக்ஸை வலதுகாலில் நுழைத்து நிமிர்கையில் செல்லிடைப் பேசியின் சிணுங்கல் பார்த்தால் மேலாளர். உள்ளே அறையுள் உடை மாற்றிக் கொண்டிருந்த மனைவியும் பெண்ணும் இன்னும் வரவில்லை. எடுத்தான். “ஹலோ.. …
”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான். துர்கா எதுவும் பேசவில்லை.
மருத்துவர் சரவணக்குமார் பின்னங்கால்களைத் தூக்கிப் பார்த்தார். லட்டு வலி தாங்கமுடியாமல் கத்தினான்.தலையைத் திருப்பிக் கடிக்க முயன்றான் . கூம்பு வடிவிலான அந்தப் பிளாஸ்டிக்கை மட்டும் அவனது தலையில் பொருத்தமால் இருந்திருந்தால் மருத்துவரின் விரல்கள் துண்டாகியிருக்கும்.அது பாதுகாப்புக் கவசமாக உதவியது.
வணக்கம். மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் ‘கானல் அமீரகம்” வழங்கும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் சிறுகதைப் போட்டியை உங்கள் நண்பர்களுக்கும், நீங்கள் …