Home வட்டார வழக்கியல்கொங்கு வட்டார வழக்கு – 1

கொங்கு வட்டார வழக்கு – 1

by Sasi Dharani
2 comments

#வாப்பாடு
#வள்ளியோடு

ஏனுங், நம்மூர்ல இருக்கற அத்தன பொட்டப்புள்ளைங்களுக்கும் அத்தன காடு தோட்டம் இருக்குதுங்ளாமா,வேல வெட்டிக்கெல்லாம் போவோனு,இல்ல கஷ்டப்படற படிப்பெல்லாம் படிக்கோனுனும்னு எந்த ரோசனையுமே வேண்டிதில்லீங்ளாமா..
நீங்க என்னமோ புள்ளைங்னா படிக்கோனும்,தங்கால்ல நிக்கோனும்னு பாகவதர் காலத்து ஆளாட்ட எந்நேரமும் பேசீட்டுக் கெடக்கறீங்க.
அத்தன சொத்துக் கெடக்கீல எதுக்கு கஷ்டப்படோனுங்கறேன்.

அதெல்லாம் கெடக்குட்டு,இத்தன வெவரமா பேச உனக்கு யாராயா சொல்லிக்குடுத்தா..

அட ,மேக்காலத்து தோட்டத்து சின்னப்புள்ளையக்காதானுங் சொல்லிட்டிருந்தாங்க.
அவளுக்கு வாப்பாடுந் தெரியாது,வள்ளியோடுந் தெரியாது.
அவ சொன்னானு நீ இங்க வந்து இந்த நூணாயம் பேசீட்டு திரிறயா( வாப்பாடு- பாத்திரத்தில மேல இருக்கும் வாய்பகுதி,வள்ளியோடுனா ,பானைய நடுவால ஒடச்சா கீழ இருக்கற பகுதி)

( எந்த விசயத்த பத்தியும் முழுசா தெரியாம அடுச்சுடறதுக்கு பேரு வாப்பாடு தெரியாது,வள்ளியோடுந் தெரியாது)

Author

You may also like

2 comments

சாந்தி மாரியப்பன் July 2, 2025 - 6:55 pm

அருமை. வட்டார வழக்கை அறியத்தந்தமைக்கு நன்றி.

Reply
Ramasamy July 2, 2025 - 11:01 pm

நல்ல தொடர். அறிந்துக் கொள்ள ஆவலாக உள்ளோம், தொடருங்கள்.

Reply

Leave a Reply to சாந்தி மாரியப்பன் Cancel Reply