மழை வேண்டும்
மழை வேண்டும்
பருவம் தவறா
மழை வேண்டும்
பயிர்கள் தழைக்க
மழை வேண்டும்
நிறைவாய்ப் பெய்யும்
மழை வேண்டும்
நீர் நிலை பெருக
மழை வேண்டும்
வயல்வெளி செழிக்க
மழை வேண்டும்
உழவர் வாழ
மழை வேண்டும்
மண் வளம் பெறவே
மழை வேண்டும்
மரங்கள் வளர
மழை வேண்டும்
பூக்கள் பூத்துக் குலுங்கிடவே
புயலில்லாத
மழை வேண்டும்
மண்ணின் வாசம்
வர வேண்டும்
மழையின் வரவை
சொல்வதற்கே
மழையின் சாரல்
அடித்திடவே
மனமும் குளிர்ந்து
போயிடுமே
காகிதக் கப்பல் விட வேண்டும்
மழையின் வேகம்
தணிந்த பின்னே
மழையின் ஊடே
வரும் வெயில்
வானவில்லைத்
தந்திடுமே
மழை வந்தால்
மழை வந்தால்
மண்ணில் உள்ளோர்
மகிழ்வோரே
நன்றி சொல்லி
மழையைத்தான்
என்றும் அவர்கள் வணங்குவரே!