சில சமயம் பெற்றோர் தம் பிரச்சனையை சொல்ல ஆள் இல்லாமல் தன் குழந்தையை தனக்கு சமமான நணபராக பாவித்து தன் பிரச்சனைகளை அதனிடம் இறக்கி வைக்க ஆரம்பித்துவிடுவார்கள். குழந்தை இங்கே ஒரு தெரபிஸ்டின் பணியை செய்கிறது
உளவியலில் இதற்கு பேரண்டிபிகேசன் (Parentification) என பெயர். தன் வயதுக்கு பொருத்தமில்லாத பணியை செய்யும் வேலை அந்த குழந்தைமேல் சுமத்தப்படுகிறது.
இதில் இன்னொரு வகை இருக்கு. “உன் தம்பியை பார்த்துக்கொள், தங்கையை பார்த்துக்கொள். நீ தான் கரண்ட் பில் கட்டணும்” என்பது மாதிரி பெரியவர்கள் பார்க்கவேண்டிய வேலை குழந்தைமேல் சுமத்தப்படுவது.
தன் பிரச்சனையை பெற்றோரிடம் சொல்லி அட்வைஸ் பெறவேண்டிய வயதில், பெற்றோரின் பிரச்சனைக்கு வடிகாலாக இருக்கும் தெரபிஸ்ட் வேலையை செய்ய நேர்கையில் அதற்கு கடுமையான மன அழுத்தம், டிப்ரஷன் எல்லாம் வரும்.
பெற்றோருக்கு எமோஷனல் சப்போர்ட் கொடுக்க நேர்கையில், அதற்கு அந்த திறமை இல்லை. ஆனால் தன் மனதில் இருப்பதை எல்லாம் அதனிடம் கொட்டுகையில் அதற்கு அதை எல்லாம்ச் எப்படி எதிர்கொள்வது என தெரியாது.
இதனா படிப்பில் பிரச்சனை, நண்பர்களுடன் பழகுவதில் பிரச்சனை, தன் வயதைஒத்த குழந்தைகளுடன் விளையாடாமல் இருப்பது மாதிரியான விளைவுகள் துவங்கும்
அவர்க்ள் உங்கள் அட்வைஸர் அல்ல. உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கு அவ்ரகளிடம் யோசனை கேட்கவேண்டாம். அவர்கள் என்னதான் விவரமாக இருப்பதாக நீங்கள் நினைத்தாலும்…
அவர்கள் உங்களுக்கும் உங்கள் கணவ்ர்/மனைவிக்கும் நடுவே இருக்கும் பிரசனையை தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து பிரசிடண்ட் அல்ல. உங்கள் பிரச்சனைக்கு அவர்களை மத்தியஸ்தத்துக்கு அழைக்கவேண்டாம்.
எமோஷனல் ரீதியில் உங்களுக்கு அட்வைஸ் கொடுக்கும் நிலைக்கு எப்போதும் அவர்களை கொன்டுவரவேண்டாம். அதற்கு அவர்களுக்கு அனுபவம் இல்லை, தகுதியும் இல்லை.
தம்பி/தங்கையை வளர்க்கும் பொறுப்பு அவர்களுடையது அல்ல. அது உங்களுடையது. பெற்றோர் ஆகும் தகுதி இல்லாத பிள்ளையிடம் அந்த பொறுப்பை கொடுக்கவேண்டாம்
குழந்தைகளை, குழந்தைகளாக இருக்கவிடுவோம். அவர்களின் வயதுக்கு மீறிய பொறுப்புகள், சுமைகளை அவர்கள் மேல் சுமத்தவேண்டாம்.