காலையில் எழுகிறீர்கள்..ஒரு தேவதை வீட்டில் 1 கோடி ரூபாய் பணத்தை போட்டுவிட்டு போயிருக்கிறது. வீட்டு முகப்பில் அதே தேவதை டயோட்டா காரை நிறுத்தியிருக்கிறது. உங்கள் மனைவி/தாய்க்கு 1 கிலோ தங்கம் பரிசாக விட்டு போயிருக்கிறது
ஆனால் தேவதையை வாழ்த்தி, கொண்டாடி கோயில் கட்டுவதுக்கு பதில் இருவரும் சேர்ந்து தேவதையை திட்டி தீர்த்து சபிக்கிறீர்கள். இருவரும் உட்கார்ந்து அழுது புலம்பி வருத்தபட்டு கண்ணீர் வடிக்கிறீர்கள்..
காரணம்?
உங்கள் தெருவில் இருக்கும் மற்ற வீடுகளில் தலா 2 கோடி பணம், 2 கிலோ தங்கம், வீட்டு முகப்பில் ஒரு பி.எம்.டபிள்யூ காரை அதே தேவதை நிறுத்தியிருக்கிறது’ ஆக 1 கோடி ரூபாய், 1 கிலோ தங்கம், டயோட்டா கார் இருந்தும் நீங்கள் மகிழ்ச்சி அடையவில்லை, ஏழையாக உணர்கிறீர்கள், அழுகிறீர்கள், வருத்தபடுகிறீர்கள்…
இதெல்லாம் கனவா, கற்பனையா, நிஜமா?
பிளாக் அன்ட் ஒயிட் டிவி, லேண்ட்லைன் போன், ஸ்கூட்டர், பழைய பாடாவதி கம்ப்யூட்டர்…இவை இருப்பதே அந்தஸ்தின் அடையாளமாக கருதப்ட்ட காலம் உண்டு. இவற்றை அடைவதை வாழ்நாள் கனவாக கருதியவர்கள் உண்டு.
இன்று இவற்றை வைத்திருப்பவர்கள் ஏழைகள்.
60 இஞ்சு டிவி வைத்தொருப்பவன் 80 இனுசு டிவி வைத்திருப்பவனை பார்த்து தன்னை ஏழையாக உனர்கிறான். பென்ஸ் காரில் போகிரவன் லாம்போர்கினியில் போகிறவனை பார்த்து ஏழையாக உனர்கிறான்
ஜெப்பிசோஸை ஒப்பிட்டு அம்பானியும், டாட்டாவும் ஏழையாக உனர்கிறார்கள். ஸ்கூட்டரில் போகிறவன் காரில் போகிறவனை பார்த்து தன்னை ஏழையாக உனர்கிறான்’ பஸ்ஸீல் போகிறவன் ஸ்கூட்டரில் போகிறவனை பார்த்து ஏழையாக உனர்கிறான். பிளாட்பாரத்தில் படுத்திருப்பவன் நிம்மதியாக உலகை கண்டு நகைத்தபடி பெருமாள் கோயில் புளியோதரையை உண்கிறான்…அதன் சுவை அவன் மனதை நிறைக்கிறது. காரணம் அவனுக்கு நேற்றையை தினத்தை பற்றிய வருத்தம் இல்லை, நாளைய தினத்தை பற்றிய எதிர்பார்ப்பு இல்லை.
ஐந்து நட்சத்திர ஓட்டல் பஃபேயில் அமர்ந்தபடி பிசினஸ் டீலிங்கை எப்படி முடிக்கலாம் எனும் யோசனையில் இருக்கும் கோடீஸ்வரரால் தன் உணவின் சுவையை ரசிக்க இயலுவதில்லை. இயந்திரமயமாக உண்கிறார்.
முன்னேற்றம், செல்வம்,வசதி, அந்தஸ்து..எல்லாமே மற்ரவரை ஒப்பிட்டுதான் மகிழ்ச்சியும், வருத்தமும் அடைகிறோம்.
தன்னிடம் இருப்பதை வைத்து மகிழ்ச்சியும், பெருமிதமும் அடையாதவன் எத்தனை பெரிய நிலைக்கு போனாலும், வீடு முழுக்க பொருட்கள் இருந்தாலும் மகிழ்ச்சி அடையமாட்டான். பொருட்கள், சம்பளம், வசதி, பதவியை வைத்து முன்னேற்றத்தை அளவிடுவது பலனற்றது.
உங்களிடம் இப்போது இருக்கும் வேலை எத்தனையோ பேரின் வாழ்நாள் கனவாக இருக்கலாம். உங்களிடம் இப்போது இருக்கும் பைக்கை பொன்றதொரு பைக்கை என்ராவது ஒரு நாள் வாங்குவேன் என திட்ட்மிட்டபடி ஒருவன் சைக்கிளில் போய்க்கொண்டிருக்கலாம்.
நீங்கள் “இந்த பாடாவதி பைக்கில் ஏறி அந்த பாழாபோன வேலைக்கு போகிறேனே” எனும் கவலையில் அலுவலகத்துக்கு போய்க்கொண்டிருக்கலாம். சைக்கிள் முதல் பென்ஸ் கார் வரை.
பியூன் முதல் கம்பனி பிரசிடன்ட் வரை.
இவற்றில் எது இருந்தாலும், இல்லாவிட்டாலும், எந்த பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீங்கள் மகிழ்ச்சியாக, திருப்தியாக இருக்கமுடியும். அல்லது தூக்கம் வராமல், கவலையிலும், வருத்தத்திலும் இருக்கமுடியும்…
இரண்டும் உங்கள் கையில் தான் உள்ளது!