Home வணிகம் மினிமலிசம் – 6 டிஜிட்டல் என்வெலப் முறையும்

 மினிமலிசம் – 6 டிஜிட்டல் என்வெலப் முறையும்

by Selvan
0 comments
This entry is part 5 of 6 in the series மினிமலிசம்

பல மினிமலிஸ்டுகள் என்வெலப் முறையை (Envelope Method) பின்பற்றுகிறார்கள். மாதத் தொடக்கத்தில் “வாடகை”, “மளிகை”, “உடைகள்” என்று தனித்தனியாக உறைகளில் பெயரை எழுதிவிட்டு, அந்தத் தேவைக்கு ஏற்ப பணத்தை உள்ளே போட்டு வைப்பார்கள். அந்த உறையில் உள்ள தொகை முடிந்துவிட்டால், அந்த மாதத்துக்கு அந்த செலவையும் நிறுத்திவிடுவார்கள். இப்படி செய்வதன் மூலம் செலவுகள் பட்ஜெட்டுக்குள் அடங்கி விடும்.

ஆனால் இம்முறை இன்றைய வாழ்க்கையில் சிரமமானது. அனைத்துப் பணத்தையும் கையில் எடுத்துக்கொண்டு கடைகளுக்கு செல்வது பாதுகாப்பானதுமில்லை.

இங்கு தான் ஜிபே (GPay) போன்ற டிஜிட்டல் வழிகள் உதவுகின்றன. இந்தியாவில் கிரெடிட் கார்டு இல்லாமல் கூட, ஜிபே மூலம் சிக்கனமாக வாழ முடியும். ஜிபே-இல் இருந்து பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து மட்டுமே செலவாகும். அதனால் கையில் உள்ள வரவுக்குள் தான் பொருட்களை வாங்க முடியும்; கடனை வாங்கிச் செலவு செய்வது தவிர்க்கப்படுகிறது.

டிஜிட்டல் என்வெலப் முறை

இன்றைக்கு பலர் டிஜிட்டல் என்வெலப் முறையை பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.

  • ஒவ்வொரு மாதமும், வங்கிக் கணக்கிலிருந்து “வாடகை”, “மளிகை”, “பயணம்”, “விளையாட்டு” போன்ற பிரிவுகளுக்காக சிறிய சப்-அக்கவுண்டுகள் (sub-accounts) அல்லது சிங்கிங் பண்ட்ஸ் (sinking funds) உருவாக்கலாம்.
  • சில வங்கிகள் (எ.கா., HDFC, ICICI, SBI YONO, Axis Bank) goal-based accounts / savings pots உருவாக்கும் வசதி தருகின்றன. இதன் மூலம், “Vacation”, “Festival Expenses”, “Emergency Fund” போன்ற தனிப்பட்ட இலக்குகளுக்காகத் தொகையை வைத்திருக்கலாம்.
  • ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வளவு செலவழிக்கலாம் என்று முன்கூட்டியே பணம் மாற்றி வைக்கலாம்.
  • UPI apps (GPay, PhonePe) அல்லது bank apps மூலமாக அந்த பிரிவுக்கான செலவுகளை கண்காணிக்கலாம்.
  • ஒரு பிரிவில் பணம் முடிந்துவிட்டால், அந்த மாதத்திற்கு அந்தப் பிரிவில் இனி செலவில்லையென்று தெரிந்துகொள்ளலாம்.

இது பாரம்பரிய “காசு என்வெலப் முறை” போலத்தான், ஆனால் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் இருக்கும்.

Series Navigation<< மினிமலிசம் 5:- இலாபம் காண்பது எப்படி?<< மினிமலிசம் 4:- நிம்மதியின் திறவுகோல் எது?

Author

You may also like

Leave a Comment