வைல்ட் கார்ட் என்டிரி. இருக்குற திருவாத்தானுங்க பத்தலன்னு இன்னும் நாலு பேரு வேற.
தம்பதிகள் ப்ரஜனும், சாண்டிராவும், அப்பறம் விஜய் டிவி நட்சத்திரங்கள் திவ்யாவும், அமித் பார்கவும். உள்ள போயி கிழிச்சு கேப்பய நட்டிருவோம்னு போனானுங்க.
என்னத்த எழுதி குடுத்தானுங்களோ அத அப்டியே செஞ்சானுங்க. ஏன் உள்ள வந்தீங்கன்னு ஒரே கேள்விய எல்லாரையும் கேட்டு அத எழுத சொல்லி அத ரிவியூ செஞ்சு சரியில்லாத பதில கிழிச்சானுங்க. இதுல ப்ரஜன் சும்மா இல்லாம கமரு பேட் டச்சு பண்றான்னு வாட்டரு கிட்ட பாரு பேசுனத போட்டு குடுத்துட்டான்.
கமரு: ஆமா நீ வாட்டரு கிட்ட என்ன சொன்ன?
பாரு: கடைசியா அவன் பண்ண ரீல்ஸுல க்ளாமர் கம்மியா இருக்குன்னு சொன்னேன்
கமரு: என்னய பத்தி என்ன சொன்ன?
பாரு: உன் க்ளாமரப் பத்தி நான் எதுவுமே பேசலயேப்பா
கமரு: பாரு…இங்க பாரு! என் பிஹேவியரப் பத்தி அவன் கிட்ட என்ன சொன்ன?
பாரு: உன் கிட்ட என்ன சொன்னேனோ அதத்தான் அவன் கிட்ட சொன்னேன்
கமரு: என் கிட்ட என்ன சொன்ன?
பாரு: அத நீதான் சொல்லனும். சொல்லு நான் உங்கிட்ட என்ன சொன்னேன்…
கமரு: உன் தலைய திருப்ப வேண்டிய நேரம் வந்துருச்சு//
ப்ரஜன் சாண்டிரா மாதிரி அமித்தும், திவ்யாவும் என்னத்தையோ பேசிட்டு இருந்தானுங்க.
வந்தவனுங்க, வந்ததுக்காக கோவமா இவனுங்ககிட்ட எதயாவது சொல்லனுமேன்னு சொல்லிட்டு இருந்தானுங்க. இவனுங்க என்ன பண்ணப் போறானுங்கன்னு இன்னைல இருந்துதான் தெரியும். பாப்போம்!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^