நன்றியுணர்வு நெஞ்சில்
அன்பின் ஒளியேற்றும்
நிறைவும் நிம்மதியும்
தானாய் வந்து சேரும்
துன்பம் வரும்போது
துவள விடாது காக்கும்
செய்ந்நன்றி மறவாக் குணம்
சிறந்த வாழ்வை வரமாக்கும்
பசியாற்றும் உணவுக்கும் நீருக்கும்
மானம் காக்கும் உடைக்கும்
சுவாசம் தரும் காற்றுக்கும்
நாளும் நன்றி சொல்வோம்
உறவால் நட்பால் பெறும்
நலன்களை மனதில் நிறுத்துவோம்
துயரத்தில் தோள் கொடுத்தோரை
என்றென்றும் மறவாதிருப்போம்
நன்றியோடு வாழ்வதே
பண்பாட்டின் பெருமையாகும்
உயர்ந்த இக்குணமே
அறவழியின் நெறியாகும்.
Author
-
கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.