காலத்தின் கொடை

1
மலையுச்சி
மேகம் சூடிய
வானத்தின் வாசல்.

2
மாலை வயல்வெளி
நெற்கதிரில் பொன்னொளி
பணியும் தலைகள்.

3
பாதி மறைந்த நிலவு
வலையைச் சீரமைக்கும் சிலந்தி
ஊசலாடும் வெள்ளி இழை.

4
அசையாத நாணல்கள்
மீன்கொத்தியின் நிழல்
உறையும் மீன்.

5
அரசமரக் கிளையில்
சிக்கிய காற்றாடி
விலகிச் செல்லும் காற்று.

*

Author

  • ராமலக்ஷ்மி :
    எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.

    இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய' விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டைப் படங்களாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Related posts

வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் – 2

நன்றியுணர்வின் மகத்துவம்

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 21