“பண்புடன்” மின்னிதழின் முதலாம் ஆண்டுநிறைவு திருவிழா!

வாசகர்களின் பேராதரவோடு, இணைய உலகில் தடம் பதித்த “பண்புடன்” மின்னிதழ் தனது முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது! இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு பயணித்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக, எங்களது அன்பு வாசகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தியைப் பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் பேனாமுனைக்கு வேலை கொடுக்கும் உன்னத நேரமிது; ஆம், எங்களின் முதலாமாண்டு நிறைவை முன்னிட்டு பிரம்மாண்டமான சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவிருக்கின்றன.

உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கற்பனைத் திறனையும், எழுத்து ஆளுமையையும் உலகிற்கு வெளிக்காட்ட இதுவொரு பொன்னான வாய்ப்பு. உங்கள் சிந்தனையில் உதிக்கும் சுவாரசியமான சிறுகதைகள், நெஞ்சைத் தொடும் கவிதைகள் மற்றும் அறிவுப்பூர்வமான கட்டுரைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்தப் போட்டிகளில் பங்கேற்று, உங்கள் எழுத்துக்களால் எங்களை அசத்துவதோடு மட்டுமல்லாமல், ஈர்க்கும் படைப்புகளுக்குக் காத்திருக்கின்றன சுவையான பரிசுகளும் பாராட்டுக்களும்!

வார்த்தைகளால் வர்ணஜாலம் செய்யத் தயாரா?

உடனே உங்கள் படைப்புகளைத் தயார் செய்து, “பண்புடன்” மின்னிதழின் இந்த முதலாமாண்டு எழுத்துப் பெருவிழாவை இன்னும் கோலாகலமாக மாற்றிடுங்கள். படைப்புகளை panbudansskk@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு கடைசி நாளான ஜூலை 2,2026 இந்திய நேரம் நள்ளிரவுக்கு முன் அனுப்புங்கள், பரிசுகளை வெல்லுங்கள். மேலும் விவரங்கள் பதிவில் இணைக்கப்பட்டிருக்கும் படத்தில்.

Author

Related posts

நரிகளுக்காக – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

காதல்

மருத்துவர் பக்கம் – 30: கோல்டன் ஹவர்