அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 16: சீறிய கணை
இலக்குவன் கிஷ்கிந்தையின் வாயிலில் நின்றிருந்தான். அவன் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்திருந்தன. அவனின் சீற்றத்துக்குக் காரணமும் இருக்கத்தான் செய்தது. மழைக்காலம் தொடங்கி, மலையில் மூன்று மாதங்களாகக் கொட்டித் தீர்த்ததில் யாரும் யாரையும் சந்திக்க இயலாமல் இருந்தனர். இராமன் சீதையை நினைந்து நினைந்து…