கடந்த பதிவில் சில மயங்கொலிச் சொற்களைச் சிந்திக்கச் சொல்லியிருந்தேன். அவை: கட்டடம் என்றால் கட்டப்பட்ட இடம் – வீடு என்று பொருளாகும். கட்டிடம் என்றால் வீடு முதலியன கட்டுதற்குரிய இடம் (Plot, Site) என்றாகும். (தமிழறிஞர் பா. வரதராசனாரும் இதனைச் சுட்டியுள்ளார் …
தமிழே அமிழ்தே
எழுத்தில் செய்யும் பிழைகள் : எழுத வேண்டும் என்கிற ஆவல் கொண்டோர், தம்மை அறியாமல் செய்யும் பிழைகள் சிலவற்றை இப்போது பார்ப்போம்: அருகில் என்பதைக் குறிக்க அருகாமை என்று பலரும் பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்தி வருகின்றனர். படத்தில், அருகாமை என்பது அருகில் …
(இத்தொடரில் தமிழின் சில இலக்கணக் குறிப்புகள் மட்டுமின்றி இலக்கியக் குறிப்புகள் சிலவற்றையும் தர நினைக்கிறேன் ) கண் பொத்திய காதல் காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். கண் பொத்திய காதல் என்று தலைப்பை அந்தப் பொருளில் சொல்லவில்லை. ஆணாயினும் பெண்ணாயினும் நம் சிறுவயதில் …
சமூக ஊடகத்தில் அறிமுகமான நண்பர் அவர். குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவாளர். அவருடைய பதிவுகள், ஏரணங்கள் அழுத்தம்திருத்தமானவை. அதற்காகவே விரும்பிப் படிப்பேன். அண்மையில் தன் கட்சியின் சாதனைகளைப் பட்டியலிட்டு விட்டு இறுதியில் ஒரு வரி இப்படி முடித்திருந்தார். “இவைகள் எம் இயக்கத்திற்கு …