காடுகளின் வசித்து மிருகங்களை வேட்டையாடி வாழ்ந்த மக்கள் எப்பொழுது ஒரு சமூகமாக ஒன்றிணைந்து வாழ தொடங்கினார்களோ அப்பொழுதிருந்தே இன்றைய பொருளாதார கட்டமைப்பிற்கான அடித்தளம் உருவாகிவிட்டது. கூட்டமாக வாழ தொடங்கிய பின்னர் மனிதனுக்கு தேவைகள் ஆசைகள் உருவானது. அன்றைய காலகட்டத்தில் உடல் வலிமை மிக்கவர்களே தலைமை பொறுப்புகளில் இருந்தனர். அவர்கள் பருவநிலை மாற்றங்களை பொருத்து முடிவு எடுத்தனர். மழை காலம் வர போகிறதென்பதை உணர்ந்து உணவுகளை சேமித்து வைக்க ஆரம்பித்தனர்.
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி ஒன்று உள்ளது “Necessity is the mother of Invention”. மனிதனின் அத்தியாவசிய தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கான காரணங்களாக அமைந்தது. அப்படியான கண்டுபிடிப்புகளில் முக்கியமானது ஒன்று உண்டென்றால் அது சக்கரம். அதுவே மனிதனின் வணிக நடவடிக்கைகளுக்கான பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு போக உதவியது. சக்கரம் கண்டுபிடிக்க பட்டதால் தான் பண்டமாற்று முறை என்றொன்று உருவானது. சக்கரமே நாணயங்கள் பயன்பாட்டுக்கு வந்ததற்கு காரணமாக அமைந்தது.
பொதுவாய் சக்கரத்தின் கண்டுபிடிப்பிற்கும் ஆதிகாலத்தில் நிகழ்ந்த பொருளாதார வளர்ச்சிக்குமான தொடர்பை யாரும் பெரியதாக பேசுவது இல்லை அதற்கு மற்றொரு காரணம் அதற்கான ஆதாரங்கள் நம்மிடத்தில் இல்லை என்பது தான் உண்மை.
வேட்டையாடிகளாக இருந்த மனிதர்கள் சமூகமாக வாழ தொடங்கியது எதோ ஒரு குறிபிட்ட பகுதியில் மட்டும் நிகழவில்லை. அது பல்வேறு நிலபரப்புகளில் ஒரு காலத்தில் பரவலாக நிகழ்ந்த ஒன்று.
அப்படி பல்வேறு இடங்களில் குடியேறி வாழ தொடங்கிய மக்களிடத்தில் வணிக பரிவர்த்தனைகள் நடக்க தொடங்கியது.
உதாரணமாக நீர் நிலையங்கள் பக்கத்தில் குடியேறிய மக்களை உணவு வகைகளுக்கு நீரை பண்டமாற்று முறையில் கொடுத்து உணவு வகைகளான பழங்கள் காய்கறிகள், மாமிசம் ஆகியவற்றை பெற்று கொண்டனர்.
இது இப்படியாக இருக்க சில பொருட்களின் தேவை குறைந்த பொழுதோ கொடுக்க வேண்டிய பொருட்கள் அதிக எண்ணிகையில் இருந்து கையிருப்பில் குறைவான பொருட்கள் இருந்த பொழுது அல்லது அப்படியான ஒரு சமயத்தில் தான் மனிதன் கொடுக்க வேண்டிய அளவிற்கு சாட்சியாக சிறு கற்களை கொடுக்க ஆரம்பித்தார்கள். பிறகு கற்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பொழுது கற்களில் கோடுகள் போட்டு கொடுக்க ஆரம்பித்தனர்.
அப்படி பல்வேறு நிலபரப்பில் வாழ்ந்த மக்கள் ஒரே இடத்தில் அல்லது ஒரே ஆளிடம் வணிகம் செய்ய ஆரம்பித்த பொழுது தான் எந்த கற்களை யார் கொடுத்தார்கள் என தெரிந்துகொள்ள அதில் அடையாளத்தை வெட்டி கொடுக்க ஆரம்பித்தனர். அந்த அடையாளமென்பது அந்த சமூகத்து மக்கள் ஏற்று கொண்ட அடையாளமாக இருக்கும். மிருக சின்னம், நிலா சின்னம் சூரியன் சின்னம் ஆகியவை பயன்படுத்த பட்டன. இதுவே சிறு குழுக்களாக வாழ்ந்த சமூகத்து மக்கள் பெரிய ராஜ்ஜியமாக உருமாறின பிறகு வணிகத்திற்காக கொடுக்கப்பட்ட கற்களுக்கு பொதுவாய் ஏற்றுகொள்ள பட்ட ஒரு வடிவத்தையும் சின்னத்தையும் கொடுத்தார்கள்.
மீன் சின்னம் பன்றி சின்னம் ஆகியவற்றை பொறித்து நாணயங்களாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இன்று பயன்பாட்டில் இருப்பது போல ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்றெல்லாம் இல்லை. ஒரு கல்லுக்கு இத்தனை அளவு பொருள் தர வேண்டும் என்று இருந்தது.
அதாவது ஒரு கல்லுக்கு எட்டு வாழைபழங்கள் கிடைக்குமென்று இருந்தது. இந்த எட்டு வாழைபழங்கள் என்பது ஒரு சிறு உதாரணம் தான். ஆனால் இது போன்ற மதிப்பீடுகளுக்கு வர பல நூற்றாண்டிகளாகி இருக்கும் என்பது தான் உண்மை.
மனிதனின் தேவைகளே வணிக வாய்ப்புகளை உருவாக்கியது சமூக கட்டமைப்புகளை உருவாக்கியது, சட்டங்களை உருவாக்கியது, ராஜ்ஜியங்களை உருவாக்கியது, போரை உருவாக்கியது, போரில் வெற்றி பெற ஆயுதங்களை உருவாக்கியது.
இந்த பல உருவாக்கங்களுக்கு பின்னால் இருந்தது பொருளாதாரமும் அதன் பரிணாம வளர்ச்சியும்.
அதை பற்றி தான் வரலாற்றில் பொருளாதாரம் தொடரில் இனி வர போகிற அத்தியாயங்களில் தெரிந்ததை சொல்ல போகிறேன்.
தொடரும்…