33
எனது கண்ணீர்
ஆன்மாவிலிருந்து வடிவது
அதன் தூய்மை
ஒருவரைப் பகலிலும் தூங்க விடாதது
எத்தனை மைல்களுக்கு அப்பால்
இருந்தாலென்ன
எத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்ன
இனி தேடவேண்டிய
எந்த அவசியங்களுமில்லை
நீயே உதிர்த்த சொற்கள்தான்
நான் மாயங்களை நிகழ்த்துபவள்
நீ எனை வந்து சேர்வாய் தேவ.
Author
You Might Also Like