இந்த நாட்களில் ஒன்று – கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ்

தமிழாக்கம்: செல்வராஜ் ஜெகதீசன் மழையில்லாத, சற்றே சூடான ஒரு திங்கட்கிழமை காலை, எப்போதும் சீக்கிரம் எழுந்து விடும் ஆரேலியோ எஸ்கோவர் (படித்துப் பட்டம் பெறாத பல் மருத்துவர்) காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்தார். பிளாஸ்டர் அச்சில் பொருத்தப்பட்டிருந்த சில…

Read more

வழித்தடங்கள்

பள்ளிக்காலம் அது. அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரிய நூலகம் உண்டு. ஆனால், நாங்கள் சென்று புத்தகம் எடுக்கவோ, படிக்கவோ அனுமதி இல்லை. அத்தோடு இப்படி ஒன்று இருப்பதுகூட நாங்கள் அறியாதது. ஆசிரியர்களின் மதிய நேர ஓய்வுக்கூடமாகவே இருந்தது அது. புதிதாக வந்த தமிழாசிரியர்…

Read more

வரலாற்றில் பொருளாதாரம் – 25

சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் யாரும் வரவில்லை. இராமானுஜர் தனது காலத்தில்…

Read more

வலைப்பூ – 4

This entry is part 4 of 7 in the series வலைப்பூ

“சுசிதானே? நான் மீனா பேசுறேன்.” சுசியின் முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் நாடித் துடிப்பு எகிறியது. முகம் தெரியாத ஒரு குரல், தன் வீட்டின் தனிமைக்குள் அத்துமீறி நுழைந்தது போன்ற உணர்வு. உணர்ச்சிகளைச் சிரமப்பட்டு அடக்கிக்கொண்டாள். “சொல்லுங்க மீனா. யார்…

Read more

அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 –  இரு மகளிர் .. இரு சிந்தனை.

This entry is part 33 of 55 in the series அசுரவதம்

கிஷ்கிந்தையின் அரண்மனை உப்பரிகையில் நின்று மௌனமாக இருளை வெறித்துக் கொண்டிருந்தாள் தாரை. அவள் கண்கள் இருளையும் தாண்டி எங்கோ ஊடுருவிக் கிடந்தன. இயற்கையின் ரகசியங்களைத் துருவித் தேடும் ஆவல் அந்தக் கண்களில் உறைந்து கிடந்தது. அவள் கிஷ்கிந்தையின் பேரழகி மட்டுமல்ல, எதனையும்…

Read more

5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று

This entry is part 1 of 5 in the series 5 நான்கள்

“நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் தெரியுமா? உன்னுடைய நந்தினிதான் அது, ஆதித்த கரிகாலா!” கிட்டத்தட்டக் கத்தலாய்ச் சொன்னான் பார்த்திபேந்திரன். கண்களில் கொஞ்சம் பொறாமை கலந்த உணர்வா என்ன? செவேலென்றிருந்த முகம் மீண்டும் சிவந்துவிட உதடுகள் துடித்தன. உற்றுப் பார்த்தேன் அவனை.…

Read more

ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்

முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால்,…

Read more

அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை

தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன் அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அன்றாட உணவிற்கே அவர்கள்…

Read more

துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்

தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி…

Read more

மொழிபெயர்ப்புக்கவிதைகள் – சந்திரா மனோகரன்

ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்எழும்புகிறதுஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல ஓ!…

Read more