ராமலக்ஷ்மி :
எழுத்தாளர், கவிஞர், ஒளிப்படக் கலைஞர். பெங்களூரில் வசிக்கிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை மற்றும் ஆய்வு நிறைஞர் பட்டங்கள் பெற்றவர். சொந்த ஊர் நெல்லை. தனது வலைப்பூ மற்றும் இணைய இதழ்கள், சிற்றிதழ்கள், பத்திரிகைகளில் எழுதி வருகிறார். சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை, நூல் விமர்சனம், ஒளிப்படம் ஆகிய பல தளங்களில் இயங்கி வருகிறார்.
இவரது ‘இலைகள் பழுக்காத உலகம்’ கவிதைத் தொகுப்பு, ‘மு.ஜீவானந்தம்’ இலக்கியப் பரிசையும், ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய’ விருதையும் பெற்றுள்ளது. ‘அடை மழை’ சிறுகதைத் தொகுப்பு ‘திருப்பூர் அரிமா சக்தி’ விருதைப் பெற்றுள்ளது. இவர் எடுத்த ஒளிப்படங்களும் பல பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. அட்டை முகப்பிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
… எங்கள் வாழ்நாள் முழுவதும்
இப்படிப்பட்ட விஷயங்கள்
நடந்து கொண்டிருக்குமோ என்று—
இப்படிப்பட்ட
வலிமையுடனும் அழகுடனும்
யாரும் இருப்பதை
எவரும் விரும்ப மாட்டார்களோ என்று— …
…புயலைத் தடுத்து நிறுத்த முயலும்
பழைய மரங்களைப் போல்
பின்னால் நிற்கிறார்கள் பெற்றோர்…
வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரேஅவளது இரவு தொடங்கி விடுகிறது மங்கிய ஒளியில்பழைய புடவைகளை மடிப்பது போலபொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்நைந்து போன அதன் இழைகளில்தூக்கியெறிய முடியாத காலம் முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்அவளது மனதை அறிந்த தூக்கம்ஒருபோதும் உள்ளே நுழைவதில்லைஆனால் அழைக்கப்படாமல்உரிமையுடன்…
…ஒருவேளை
உண்மையில் முக்கியமானதை
பார்க்கும்
ஒரே உயிரினமும்
அதுவாகவே இருக்கலாம்…
…தனியாக இருப்பதை விட
மோசமானவை இருக்கின்றன
ஆனால் அதை உணர
பல தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன…
… அவ்வப்போது ஒரு நண்டு
மற்ற நண்டுகளின் மேல் ஏறி
வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். …
ஒவ்வொரு தலைமுறையும்
தன் சொந்த வாழ்க்கையை நினைவுகூர
அவரது ஏதோவொரு பாடலை
கடன் வாங்கியது