காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு வேகமாக வீசினான். அந்நேரத்தில் ஒரு பெரிய ஆண் சிங்கம் காமவள்ளியின் பக்கவாட்டில் …
இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப் பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் – அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் ஆழத்தை நாம் முழுமையாக உணரவில்லை. சில சமயம், நாம் அறிந்திருந்தாலும், நம்மை பாதிக்காதவரை அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஒரு வித மறுப்பில் (denial) இருப்போம்.
’பறந்து போ’ இயக்குநர் ராமிடமிருந்து வந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம். பொதுவாக தீவிரத்தன்மை கொண்ட படங்களையே பெரும்பாலும் தந்து வந்த அவர் மிக மென்மையான, குதூகலமான ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைத் தந்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்றோர் இனமுண்டு, …
இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, மோதல்களை, கதைகளை, கவிதைகளை, கட்டுரைகளை, உள்ளடக்கிய …
தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி!
2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. உலகின் தலைசிறந்த Go விளையாட்டு வீரர் கே ஜீ, கூகுளின் DeepMind உருவாக்கிய AlphaGo எனும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) செயலியுடன் மோதினார். இது வெறும் விளையாட்டல்ல; மனித மூளைக்கும் இயந்திர மூளைக்கும் இடையே ஒரு புரட்சிகர சவால்.
எத்தனை யுகங்கள்
கடந்திருக்கும்
இந்த பிரியத்தின்
மழைத்துளி!
அதன் கண்ணாடி
மோன உடல்
மிதந்தலைந்தது
எங்கெங்கே!
நட்சத்திரப் பூத்தையல்
காலத்தறி நெய்த
இன்னுமொரு இரவு.
கண் திறவா
பிள்ளையின்
இதழ் சிரிப்பாய்
வெள்ளி குழைத்த
நிலாத்துண்டு.
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். முதல் நிமிடமே $2.25 எனக் கட்டணம் மிக அதிகம். இப்போது போல இலவசமாக கூப்பிட இயலாது. ஆனால், இப்போது அப்படியில்லை. அமெரிக்கா போன்ற நாடுகளில் குளிர்காலங்களில் பொதுவாகவே ஒருவித மன அழுத்தம் வந்து சேரும்.
டயானாவின் அதீத அழகு அவளைக் கவர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆண்களைப் போல இடதுபுறம் வகிடு எடுத்து மற்ற முடிகளை ஆங்காங்கே துண்டு துண்டாக வெட்டி பின்புறம் லேசாக ஒட்ட வெட்டிய அவளின் ஹேர்கட்தான் டயானாவின் அழகு மேலும் தனித் தன்மையோடு மிளிரக்காரணம் என்று நினைத்தாள். விதவிதமான ஓவர் கோட்டுகளுடன் முட்டி வரையிலான ப்ராக் அணிந்து அதற்கு மேட்சான சிறிய வகை தோடுகள் கைப்பைகள் கழுத்தில் முத்துப் பெண்டன்ட் என அவள் ஒரு ட்ரண்ட்செட்டராக வலம் வந்த காலத்தை அவள் புகைப்படமாக இருப்பதை எங்கே பார்த்தாலும் சேகரித்து வைத்துக் கொள்வாள்.