மம்தானியின் எழுச்சி அதிவிரைவாகவும் மேல்நோக்கியும் மடமடவென வளர்ந்தது. டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அதிகார வர்க்கத்தில் பலர், மம்தானி யார் என்பதைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். நவம்பர் 4ஆம் நாள் தேர்தலில் நியூயார்க்கின் ஜனநாயகக் கட்சியின் மேயர் வேட்பாளராகப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மம்தானி. …
பதினைந்தாயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் பேச்சாளராக, பத்தாயிரத்திற்கும் அதிகமான தமிழ் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைத்திருக்கும் அமைப்பாளராக,
73 நாடுகளுக்கு பயணம் செய்து , 193 விருதுகளை வென்று, 40 புத்தகங்களை வெளியிட்டு, தமிழ் வளர்ச்சிக்காக பல்வேறு சங்கங்களில் முக்கிய பொறுப்பு வகித்து வரும் முனைவர் உலகநாயகி பழனியுடனான உரையாடலில் தமிழ் தடையில்லா அருவியாக பொழிந்தது.
தானப்ப முதலித் தெருவில் வீட்டின் வாசலில் மூர்த்தி சைக்கிளை நிறுத்திப் பூட்டிவிட்டுத் திரும்பிய போது வாசலிலேயே நின்றிருந்தாள் பாட்டி.
கண்களில் கவலை.
“என்ன பாட்டி. இங்க நிக்கறேள்?. அம்மா ரிப்பன் பக்கோடா பண்ணினாளாம். உங்களுக்குக்கொடுத்துவிட்டு வரச் சொன்னாள்.”
இரவு காவலுக்காக ‘ரோந்து’ செல்லும் இரு காவலாளிகளுக்கு இடையில் நடக்கக்கூடிய உரையாடல்கள், அவர்கள் இருவரும் சேர்ந்து சந்திக்கின்ற பல்வேறு சம்பவங்கள், இவற்றிற்கிடையில் தனிப்பட்ட முறையில் இவர்களது குடும்பச் சூழல், காவல்துறை இயங்குகின்ற முறை என்று பல்வேறு விஷயங்களை ஒரு கோட்டில் அழகுற கோர்த்திருக்கிறார்கள்.
காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று அழகிய கண்களைக் கண்டு பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே அவர்கள் அழைப்பதுண்டு.
அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற ஒளி கோதாவரியை தங்கமென அடித்து வைத்தது. சூரியன் அவளை தன் கிரணங்களால் தழுவிடக் கண்டவர்களால் அவளின் அழகையும் கோதாவரி நதியின் அழகையும் ஒப்பிட்டு எந்த அழகு சிறந்தது என்று கூறிட முடியாமல் திகைத்து நிற்பர்.
#வாப்பாடு#வள்ளியோடு ஏனுங், நம்மூர்ல இருக்கற அத்தன பொட்டப்புள்ளைங்களுக்கும் அத்தன காடு தோட்டம் இருக்குதுங்ளாமா,வேல வெட்டிக்கெல்லாம் போவோனு,இல்ல கஷ்டப்படற படிப்பெல்லாம் படிக்கோனுனும்னு எந்த ரோசனையுமே வேண்டிதில்லீங்ளாமா..நீங்க என்னமோ புள்ளைங்னா படிக்கோனும்,தங்கால்ல நிக்கோனும்னு பாகவதர் காலத்து ஆளாட்ட எந்நேரமும் பேசீட்டுக் கெடக்கறீங்க.அத்தன சொத்துக் கெடக்கீல …
நம் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் கருவூலமாக கலைக்களஞ்சியமாக நம்மிடம் இருப்பவை சங்க இலக்கியங்கள். அதன் தொடர்ச்சியாகப் பற்பல இலக்கியங்கள் உருவாயின. சங்கம் மருவிய கால நூல்கள் என்ற வகைப்பாட்டில் பதினெண்மேல்கணக்கு நூல்களும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அடங்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றுதான் இன்னாநாற்பது. …
சுமார் 25 முன்பு தனியார் வங்கிகள் இந்திய சந்தையில் பரபரப்பாக செயலாற்ற தொடங்கிய பின் பெரும்பாலானோருக்கு அது பிடித்த ஒன்றாக மாறியது. அது வரையில் அரசு வங்கிகளிலேயே பண பரிவர்த்தனை செய்து வந்தோருக்கு நுழைந்ததுமே குளுகுளு ஏசியுடன் கணினி மயமாக்கப்பட்ட வங்கி …
அறுவடைக்கென ஆட்கள் வந்திருக்கிறார்கள்
நல்லாச்சி வீட்டு தோப்பில்
வகைவகையாய்
மாங்காய்களும் பலாப்பழங்களும் வாழைத்தார்களுமாய்
கனியக்காத்திருந்தவற்றில்
குத்தகை போக மீதத்தை அடுக்குகிறார்கள்
நல்லாச்சி வீட்டு முற்றம் நிறைய