மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் கேட்டது. வெளியே போய்ப் பார்க்கலாம் என்று …
அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். அவள் படிக்கும் தனியார்ப் பள்ளியில் …
கள் தந்த போதை!
இந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் மாறிவிட்டது. “பண்புடன் மின்னிதழின் குழந்தைகள் தினச் …
ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்
செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று காலப்போக்கில் கண்டுணர்ந்தேன். ஆசிரியப் பணி என்பது …
“அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன். “என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ” “வந்துடுச்சே! ஏன் தெரியுமா? நாளையிலேருந்து லீவுன்னு இன்னைக்கு …
காட்டுக்குள்ளே கல்வித் திருவிழா!
அண்ணாந்து பார்த்தா வானத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வானத்தை மறைச்சபடி மரங்கள் அடர்ந்த பச்சைப் பசேல்னு ஒரு காடு. அந்தக் காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு “அமைதி வனம் தொடக்கப் பள்ளி”ன்னு பேரு. சிங்கம்தான் அந்தப் பள்ளிக்கூடத்தோட …
கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் பறக்கபயிற்றுவிக்கும் தாய்க் குருவி; நிறம் கருப்பென …
தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..
தமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் கண்டறிந்து உள்ளே நுழைந்தேன். ஒரு பெட்டியில் …
சுருள் மூக்கு பூதங்களும் சுட்டித் தம்பியும்
அரூபன், அற்புதன் இருவரும் உயிர் நண்பர்கள். அவர்கள், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. எங்கு வெளியில் சென்றாலும் அவர்கள் சேர்ந்தே செல்வார்கள். ஒரு நாள், இருவரும் விளையாடி முடித்தபின் பேசிக் …
சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும் வானவில் போல் கனவுகள் தொடரட்டும்வாழ்க்கையில் இன்பம் நிறைந்து பரவட்டும்குயில் பாட்டுடன் நாமும் பாடுவோம்மயிலுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடுவோம் பசுமை மரத்தில் பறவைகள் பள்ளிக்கூடம்மழைத் தூறல் தரும் ராகம்புத்தியில் உரைத்திட கேள்விகள் …