கவிதை

வண்ணத்துப்பூச்சிகளின் பிரபஞ்சம்

காலத்தின் கால்களில் நசுங்கவேண்டுமென்றவிதிமுறைகளின் சாம்பல்நிறப் புத்தகத்தைவாசித்தறியா பூக்கள்ஒவ்வொன்றாய் கண்மலர்த்துகின்றன காற்றின் கத்தரிக்கோலால்உலர்ந்த சருகுகளாய் நறுக்கப்பட்டுமண்ணின் ஆழத்தில் புதையப்போகும்மரணத்தின் கணக்குகளைத் தள்ளுபடி செய்துவிட்டுதங்கள் பூங்கதவுகளைத் திறக்கின்றன யாரோ வரைந்த ஓவியத்திலிருந்துதிடீரென வெளியேறும் வண்ணத்துப் பூச்சிகளாய்உலகைப் பார்க்கும்அவற்றின் பார்வையில்வானம் ஒரு நீலநிற நதியாகவும்,பூமி அதில்…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 3

வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். அந்நிலவும் அஞ்சும் அழகு என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கன்னல் மொழியாளின் கார்வண்ணக்…

Read more

திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1

தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரிவிடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும் காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்நெஞ்சின்…

Read more

தின்று செரித்தாலும் தீது

ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலேகுறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!நாவின் ருசிக்கு அடிமை ஆனாலேஉடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே! கீரையும் காயும் கனிகளும் உண்பதேகாயம் காக்கும் முறையாகும்!அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலேதீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்! உண்டது செரிக்க உதவிடவென்றுநடையும் உடற்பயிற்சியும் நன்று!நஞ்சான…

Read more

காலத்தை வென்றவன் கண்ணதாசனே

சொல்லாலே காட்சியைச் சுவைபடவே காட்டியேசெல்லாத இடத்திற்கும் சென்றுவரவே வைத்திடும்வில்லாளன் கண்ணதாசன் வியப்பிற்கு நேரானார்!கல்லாத மனிதருக்கும் காவியத்தைப் படைத்தார்! உள்ளத்து உணர்வுகளை உவமைகளில் வைத்திட்டுஎள்ளெனில் எண்ணெயென எண்ணத்தில் ஏற்றிட்டுபண்ணெடுத்துப் பதமாகவே பாரத்தை இறக்கியேமண்ணிற்குப் பெருமையாய் மன்னவன் நின்றாரே! பலாவாழை மாவுடனே பாலோடு தேனுடனேஉலாவரும்…

Read more

நல்லாச்சி – 38

This entry is part 38 of 41 in the series நல்லாச்சி

மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி…

Read more

ஈற்றடிக்கோர் பாட்டு – 2

முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். தின்று செரித்தாலும் தீது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பு விடுத்து…

Read more

திருவை மு.இரா. கவிதைகள் – 7

This entry is part 7 of 18 in the series திருவை மு.இரா. கவிதைகள்

பெருங்கோடு கிழிக்க சிறுகோடொன்றுமறைந்த கதையாகமெல்லிய கோட்டில் உலவும் உண்மைதன்னிலைத் தவறா நெறிநின்று பிறழாநியாயக் கதிராய் ஒளி வீசும்கைரேகையென ஆயிரம் கோடுகள்சூழ்ந்த உலகில்பெருங்கோடு சிறுகோடென்ற ஓராயிர பேதம்ஊரென்று நாடென்று தனக்கென்று வகுத்தகோடுகளில்ஆயிரமாயிர மோதல் இனங்காட்டும் ஊர்ப்பெயர் காட்டும்இக்கோடுகளுக்குள்சரித்திர சோகங்கள் சாகசங்கள் பலவளமில்லா இக்கோடுகள்…

Read more

இந்த விஷயங்கள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நமது வட்டமும்
நமது மெழுகுவர்த்தியின் ஒளியும்
சிறியது,
மிகச் சிறியது.
அதைத் தாங்க முடியாதவராக
கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்

Read more