- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1
- திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 14
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா
மறந்துபோக வேண்டும்
தீங்கினை நினைவுறுத்திய விடியலை
அந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தை
அனைத்தையும் மறந்துபோக வேண்டும்
வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டு
விக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்கு
கொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரி
விடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும்
காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்
நெஞ்சின் ஈரத்தைக் கண் வாளியால் இறைக்கவிட வேண்டும்
அதன் பிறகே
நீர் வற்றிய கிணறு போன்ற தேகம்
ஊற்றெடுக்கும் கனவுகளின் நீரூற்றைக்
கனவு காணும்.