378
கையிருப்புக்கென எடுத்துவைக்கப்படும்
அன்பு
காலத்தை
உண்டு
கொழுத்து நிற்கிறது…
என்மீது நரையும்
சுருக்கமுமாய்
அப்பிக்கிடப்பதெல்லாம்
அன்புதான்
கொஞ்சம் கொஞ்சமாய்த்
தின்று தீர்த்துவிட்டு
கைகால் நீட்டி சாவகாசமாய்
ஓய்வெடுக்கிறது…
அதை…
இறக்கிவைத்துவிட்டுக்
களைப்பாற
இடம் தேடியபடியே அலைகிறது வாழ்க்கை.
Author
You Might Also Like