குறுங்கவிதை – ஒமர் எல் அக்கட்

தமிழாக்கம்: சுரேஷ் பாபு

ஓமர் எல் அக்காட் ஒரு எகிப்திய-கனடிய-அமெரிக்க எழுத்தாளர் மற்றும் விருது பெற்ற பத்திரிகையாளர் ஆவார். உலகளாவிய மோதல்கள், இடப்பெயர்வு மற்றும் மேற்கத்திய நாடுகளின் தார்மீகப் பொறுப்புகள் ஆகியவற்றை ஆராயும் படைப்புகளுக்காக அவர் நன்கு அறியப்பட்டவர். எல் அக்காட் தனது எழுத்துக்களில், தற்கால நெருக்கடிகளைப் பற்றிப் பேசுவதற்காக ஒரு செய்தியாளராகத் தனது அனுபவங்களையும், கற்பனையான கதைகளையும் இணைத்து வழங்குகிறார்.

ஒரு நாள்,
போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,
உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,
தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,
எல்லாருமே எந்நேரமுமே
அநியாயத்துக்கு எதிராக
இருந்தவர்களாகத்தான் இருப்பார்கள்.

Author

Related posts

அசுரவதம் – பாகம் 22: ஒரு பதம் வைத்து மறுபதம் தூக்கி..

எண்ட் டோஹ் த்ரெ – 6

ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம்