Home நாவல்நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 5

நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 5

0 comments

“சார்!”

ஸ்ரீனிவாசப் பெருமாளிடமிருந்து விஸில் சத்தம் மட்டுமே வந்தது. பழைய பாட்டு வேறு… ஸ்கார்ப்பியோ வாகனத்தில் வேகம் நூறு கிலோமீட்டரைத் தொட்டது.

“சா-ர்-ர்-ர்!”

கிட்டத்தட்டக் கத்தினேன்.

“என்ன சைந்தவி…?”

“வழக்கு முடிந்துவிட்டது என்றீர்கள்… நிஜமாகவா? இப்போது என்னவென்றால் என் வீட்டிற்குப் போகாமல் எங்கோ போய்க்கொண்டிருக்கிறீர்கள். இல்லை… நம் காவல் நிலையத்திற்கா?”

“ஆமாம் சைந்தவி” என்றபடியே காவல் நிலையம் இருந்த தெருவில் பெருமாள் வண்டியைத் திருப்பினார்.

“சொல்லுங்கள்…”

கொக்குப்பாக்கம் காவல் நிலையத் தெருவில் பிரகாசமாக விளக்குகள் எரிந்தன. ஆனால், அந்தத் தெருவில் சில வீடுகள் மட்டுமே இருந்தன. மிச்சமெல்லாம் புதர்களால் நிரப்பப்பட்ட வெற்று நிலங்கள்; வேலியிடப்பட்டிருந்தன. காவல் நிலையத்தின் அருகில் ஒரு சோடியம் விளக்கு. எதிரில் இரு பக்கங்களிலும் வெற்று நிலங்கள், அவற்றில் புதர்கள்.

‘க்ரீச் க்ரீச்’ என ப்ரேக்கை அழுத்தி வண்டியை நிறுத்திவிட்டு, “வா சைந்தவி” எனத் தாவி உள்ளே சென்றார் அவர்.

“என்ன?” எனப் பின்னால் ஓடினேன்.

உள்ளே பெரியசாமி தன் மேசையிலிருந்து எழுந்து வணக்கம் வைக்க, அந்தப் பக்கம் ஆறுமுகம் “சார்!” என்றார்.

“இருங்கள்” என ஓடித் தன் அறையைச் சாவி போட்டுத் திறந்தார் பெருமாள்.

உள்ளே சென்ற நான் மலைத்தேன். மேசையில் சில பழைய செய்தித்தாள்கள் இருந்தன. மடிக்கணினியை இயக்கி, அது முழுமையாகத் திரைக்கு வருவதற்குள் நாளிதழ் ஒன்றைப் படித்தார். மடிக்கணினி தயாரானதும் உள்ளே தேடினார்.

நான் எதிரில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

“அதாவது சைந்தவி…”

“ஒன்றும் சொல்ல வேண்டாம் சார்.” சற்றே கோப முகம் காட்டினேன். நான் அணிந்திருந்த உடைகளை அப்போதுதான் கவனித்தேன். கரும் நீல நிற லெகிங்க்ஸ், பொருந்தாத பழுப்பு நிற மேலாடை), கூந்தலை அப்படியே அள்ளி முடித்திருந்தேன். “சைந்தவி… நீ ரொம்ப மோசம்டி! இப்படியா இவர் இங்கே நிலையத்திற்கு அழைத்து வருவார்?”

பாபத்தைப் பல்விதமாய்ப் பக்குவமாய் என்றுமே

கோபம் கொணருமே காண்.”

“சார்… ஆட்டத்திற்கே வரவில்லை. ஏற்கனவே தலைவலிக்குது, என்ன ஆச்சு? என்னை வீட்டில் விடுகிறீர்களா? ஏற்கனவே உடை சரியில்லை… இல்லையென்றால் நான் ஓர் ஆட்டோ பிடித்துக்கொள்கிறேன்.”

“காத்திரு சைந்தவி… கொஞ்சம் ஒரு லிங்க் மிஸ் பண்ணினேன்.. அதைக் கன்ஃபர்ம் பண்ணிக்கறேன். அனேகமா கொலைகாரனை நெருங்கிட்டோம்னு நினைக்கறேன்..”

“எப்படி? யார்? எங்கே பிடிக்கலாம்?”

“காத்திரு… இது ஒரு ஊகம்தான். கருணாகரன் முன்னால் அஸ்ஸாமில் பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்தார் என்று சொன்னேனே…”

“இல்லையே சார்.”

“மன்னிக்கவும், அவருடைய கடந்த கால வாழ்க்கையை இன்னும் ஆராயவில்லை. கொஞ்சம் படித்துவிட்டு வைத்திருக்கிறேன். எனவே, ஒரே ஒரு விஷயத்தை உறுதி செய்துகொண்டேன்.”

“என்ன விஷயம்?”

“டொட்டொடொய்ங்க்…”

“சரி, சொல்ல வேண்டாம்.” கொஞ்சம் முகத்தை உம்மென வைத்துக்கொண்டு எழுந்தேன்.

“சரி சரி வா… போய்க்கொண்டே பேசலாம்.”

“எங்கே?”

“வண்டியில் ஏறு சொல்கிறேன்…”

ஏறினேன். கிளம்பினோம்.

“இப்போதாவது சொல்லுங்கள்…”

“அந்தப் பாட்டில் படத்தின் பெயர் வந்தது, ‘நீல மலர்கள்’. சண்முகநாதனின் பேரன் பழுப்பு நிறச் சீருடை அணிந்திருந்தான். எனவே, இவர் பணிபுரிந்த பள்ளியின் சீருடை நிறம் என்னவென்று பார்க்க வேண்டியிருந்தது. தவிர, அந்தப் பள்ளியின் பெயர் வேறு மறந்துவிட்டிருந்தது. அதனால் பள்ளியின் பெயரை இணையத்தில் தேடிப் பார்த்தேன்.”

“ஏன் தேடிப் பார்த்தீர்கள்?” என நான் கேட்டதற்கு அவர் பதில் சொல்லவில்லை. “சார் எங்கே போகிறோம்?” இதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.

நாங்கள் எங்கள் தெருவிலிருந்து வளைந்து இன்னொரு தெருவில் நுழைந்தோம். அங்கே தெரு மூலையில் மட்டும் விளக்கொளி இருந்தது. நாங்கள் நுழைந்தபோது எங்கும் விளக்குகள் இல்லை. வண்டியின் முகப்பு விளக்குகள் மட்டுமே தெரிந்தன.

பாதி தூரம் சென்றிருப்போம். பெருமாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர், “சைந்தவி பின்னால் பார்!” என்றார்.

எனக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் சத்தம் மட்டும் கேட்டது… மோட்டார் சைக்கிள் சத்தம். விளக்குப் போடவில்லை.

“ஏன் விளக்குப் போடாமல் வருகிறான்?” என்று நான் சொல்லி முடிப்பதற்குள், அந்தத் துப்பாக்கிக் குண்டு, வண்டியின் சக்கரத்தை உரசிவிட்டு வேறெங்கோ சென்றது.

‘க்ரீச்!’

ப்ரேக்கை அழுத்த… அதற்குள் ‘தடதட’வென அந்தச் சிறு வண்டி வேகம் பிடித்து எங்களை முந்த, நாங்கள் துரத்தினோம்.

மெயின் ரோட்டில் அந்த வண்டி ஓடியது. ஓட்டியவன் ஜீன்ஸ் அணிந்த, கருப்புச் சட்டை ஆசாமி. பின்னந்தலை முழுக்க முடி.

பின் சட்டென அவன் அவென்யூஸ் சாலையில் நுழைந்தான். நாங்களும் துரத்தினோம். மணி ஒன்பதை ஒட்டிய நேரமானதால் போக்குவரத்து அதிகம் இல்லை. நாங்கள் மட்டும்தான் இருந்தோம்.

சாலையில் எங்கள் பின்னே இரும்புத் தூண்களில் காய்ந்த சோடியம் விளக்குகள் ஓடிக்கொண்டிருந்தன. நேர் மேலே, நட்சத்திரம் பதித்த கருநீலப் புடவை கட்டிய நிலவு, பூனை நடை நடந்தபடி எங்கள் பின்னால் வந்து கொண்டிருந்தாள்.

‘தட்தட்… ர்ர்ர்ர்’

முன்னால் சென்றவன் சடாலென பதினாறாவது அவென்யூவில் வளைவதைத் தூரத்திலிருந்து பார்த்தோம். அங்கு நுழைந்தபோது வண்டியின் சுவடு தெரியவில்லை. நீளமான தெரு. இறுதிவரை சென்றால் இடமும் வலமும் சாலைகள் இருந்தன.

“எங்கு போயிருப்பான்?”

பெருமாள் வண்டியை நிறுத்தினார். நான் இறங்குவதற்குள் இடதுபுறம் திரும்பிச் சில தெருக்களைக் கடந்து, ஒரு வீட்டின் முன் வேகமாய் வந்து நின்றார்.

நான் திகைத்தேன். “சார், இது பிரமோத்தின் வீடு!”

பெருமாள் சிரித்தார். “இங்குதான் அந்த கொலையாளி இப்போது இருக்க வேண்டும்!” என்றார்.

(தொடரும்)

Series Navigation<< நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4

Author

You may also like

Leave a Comment