வணக்கம்.. மறுபடி ஆராவமுதன் பேசறேன். இந்த அனந்த் இருக்கானே என்னிடம்தான் வளர்ந்த குழந்தை.. எனக்கு என்னமோ குழந்தை என கிடையாது.. அதற்காக நாங்கள் கவலை எல்லாம் படவில்லை. மஸ்கட்டில் வசதி எல்லாம் இருந்தும் ஸ்ரீனிவாசன் பையன் என்னிடமே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டான்.. …
Chinna kannan
வணக்கம்.. மீண்டும் உங்கள் ஆராவமுதன்… முளைச்சு மூணு இலை விடலை, அதுக்குள்ள என்ன லவ்? அப்படின்னு அந்தக்காலப் படங்கள்ல வசனம் வரும். இந்தப் புள்ளையாண்டான் நெடுநெடுன்னு ஸ்மார்ட்டா நல்ல படிப்போட நல்ல வேலையும் இருந்தா யாருக்குத்தான் காதல் வராது..? ஆயுஷிக்கும் வந்திருக்கு… …
காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும் …
மெல்லமெல்ல அடியெடுத்துச் சென்றே பார்த்துமின்னலென மரமதனின் பின்னால் நின்றுசொல்லவொணா உணர்வுகளை அடக்கி மேலும்தீர்க்கமுடன் பார்வைகளை விட்டு அங்கேகல்லெனவே முகமிறுக்கிக் கண்கள் கூர்ந்தேகாணுகின்ற இரைதனையே குறியும் வைத்துபற்கடித்துப் பாய்கின்ற புலிக்கு யாரும்பயமுண்டு என்றெல்லாம் கூற மாட்டார்..*மிச்சமிலா எழிலெல்லாம் கொண்ட பெண்ணேமேதினியில் உனக்குபயம் உண்டோ …
ஊரின் எல்லாப் பகுதியிலும் தேடியாகிவிட்டது. தோப்புகள், ஒன்றைக் கூட விடவில்லை.. என்றும் ஆடுகள் மேய்வதற்குச் செல்லும் புல்வெளிகளையும் விடவில்லை.. அலைந்து திரிந்து இதோ இந்த மேடான இடத்திற்கு வந்தாகிவிட்டது.. சாம்பன் எங்கு சென்றிருப்பான்? கையிலிருந்த ஈட்டியை அருகில் வைத்துவிட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள …
விவரணை வேண்டாமே வேகமாய் நெஞ்சில்சிவனை நினைந்தால் சிறப்பாம் – புவனமதைஆக்கியே காத்தும் அழிக்கவும் செய்திடும்வாக்கினில் வல்லோன் அவன் அவனன்றி ஓரணுவும் அண்டத்தில் தானாய்உவந்து அசையாதே ஊக்கமாய் ஒற்றுமையாய்க்காலம் முழுவதும் காத்திடக் கைப்பற்றுஆலமுண்ட ஈசன்தாள் ஆம் ஆமென்று சொல்பவரை அண்டிப் பதம்தருவான்போமென்று சொல்பவரைப் …
“பொல்லாத்தனம் செய்பவர்களை ஒழிப்பதற்கு ஒரே வழி நாம் பொல்லாதவர்களாக மாறுவதுதான். அதுவும் இப்போதுதான் இத்தனை ஜென்மங்களில் நீ சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறாய்.” கடகடவென சிரிப்பு வந்தது எனக்கு. சிரிக்கவும் முடியாது. ஏனெனில் கையில் தூக்கிக்கொண்டிருந்த இயந்திரத் துப்பாக்கியின் கனம்; தவிர முதுகில் …
என் கதைக்குள் நீங்கள் போகும் முன் ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். இதை நான் சொல்லச் சொல்ல எழுதுவது என் சித்தப்ஸ் எனப்படும் சித்தப்பா தான். (என்ன பாஷை பேசுறடா நீ?). எனில், நான் சொன்ன ஆங்கில வார்த்தைகளைத் தமிழ்ப்படுத்தி, தமிழில் படுத்தி …
“யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் இரண்டு சமோசாவை எடுத்து வைத்து மெல்ல பொடி நடையாய் அங்கிருந்த ஓவனில் சூடு படுத்தப் போன அந்தக்கடைப் பெண் முழித்தாள். கோபத்துடன் நான் சொல்லியிருப்பேன் என்று பார்த்தவள் …