வீட்டுத் திண்ணையில் காலைச் சூரியன்அந்தி சாயும் வரைக்கும் என் கண் தேடும்,இத்தனை வருடம் காலடிச் சத்தம்கேட்டதெல்லாம் இப்போதேன் தூரம். ஊர் தாண்டி நீ போனதனால்,சுவரெல்லாம் நீ சாய்ந்த இடம்,பாயெல்லாம் நீ படுத்த நினைவுகள்,பேச ஒரு வார்த்தை இல்லையே நீயின்றி. பழைய சோற்றைக் …
இலக்கியம்
மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் அழைக்கின்றது. அரசர் குடியில் தீபமிட்டார்,ஆசையுடன் கூடி …
நன்னாளும் நன்முழுத்தமும் நன்கறிந்துபகை நாட்டார்க்குப் பறையறைந்துதூதன் சொல் கேட்டறிந்துசமாதானத்திற்கு வழியில்லை என்றுணர்ந்துஆநிரையும் முதியோரும் பிணியுடையோரும்அந்தணரும் குழவிகளும் பெண்டிரும்அரணுக்குள் பொத்திய பிறகு… குறித்ததொரு உதயப் பொழுதில்முரசறிவித்து படை நிறுத்திஅந்தி வரை சமரிட்டுஎதிர்ப்புறம் மடிந்த வீரர்கள்எரியூட்ட நேரங் கொடுத்துஇறுதியில் நிராயுதபாணியாய் சரணடைந்தோரைமரியாதையோடு சிறைப்பிடித்துஅறநெறியில் நிலம் …
ஆலய வாசலின் முன்னிருந்தஆரவாரமிக்கப் பூக்கடைகளைத் தாண்டிவீதியின் அமைதியான ஓரத்தில்சாயம் போன குடைக்குக் கீழ்மூங்கில் கூண்டிற்கு உள்ளேசைகைக்காகக் காத்திருக்கிறது கிளி. வருவோர் போவோரைக் கவரும்வாய்கொள்ளாப் புன்னகையுடன்பச்சைக்கரையிட்ட மஞ்சள் வேட்டியும்இளஞ்சிகப்பில் சட்டையும், நெற்றியில்விபூதிப் பட்டையுடன் சந்தனமும் குங்குமமும்தரித்த ஜோஸியர்விரல்களைச் சொடுக்கவும்தாவிக் குதித்து வெளியே வருகிறது …
நவராத்திரி என்றழைக்கப்படும் ஒன்பான் இரவில் முப்பெருந்தேவியரான மலைமகள், அலைமகள், கலைமகளை வழிபடும் மரபு நம்மிடம் இருந்துவருகின்றது. முதல் மூன்று நாள்கள் வீரத்தின் அடையாளமான மலைமகளும் (துர்க்கை), அடுத்த மூன்று நாள்கள் செல்வத்தை அளிக்கும் அலைமகளும் (இலட்சுமி), இறுதி மூன்று நாள்கள் கல்வியின் …
காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில் …
“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும் …
எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ.
மண்பட்ட பாவாடையோடு மண்ணிலே விளையாடினாய்விறகடுப்பில் பூத்த புகையில் கண் சிவந்து சிரித்தாய்இந்தக் கிராமம்தான் என் உலகம்என் குடும்பம்தான் என் சந்தோஷம்இந்தச் சிறு வட்டமே என் வானம்உனக்கும் இங்குதான் இடமென்றுஇத்தனை வருடங்களாய் நான் வாழ்ந்தேன்வெளியிடம் வேறு தேசம் தெரியாமலேஎன் வாசல் தாண்டிப் போகாதே …