கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வரஅறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமதுநூலறுந்த பட்டம் போல் வேதனையில்துடிதுடிக்க… கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்டவிண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…தவிக்க…
பழமொழிகளும் சொலவடைகளும். பழமொழிகள், சொலவடைகள் என்பன மொழியின் ஆழமும் அகலமும் கண்டோரின் அனுபவச் சாறுகள். அவை எல்லோருக்குமான மழை. தமிழில் மிக அருமையான பல பழமொழிகள், சொலவடைகள் இனிமையும் பொருத்தமும் உடையவை. வாழ்வைப் பிழிந்து கருத்தாகச் சொட்டும் பழமொழிகள் / சொலவடைகள்…
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காதுநிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாதுகால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராதுஇறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாதுஇதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர்…
இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் கலந்துதன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தைமென்மையாக அறுத்துப்…
… அவ்வப்போது ஒரு நண்டு
மற்ற நண்டுகளின் மேல் ஏறி
வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். …
அறியாமை அகழியுள் அறிவினை சிதைத்துவழிகாட்டும் நல்லற நெறிகளை மறுத்துபேராசைகள் பல கொண்டு பொய்க் கடலில் வீழ்ந்துவஞ்சம் பொறாமைத் தீ மனதினில் வைத்து… நிறம் இனம் மத மொழி பேதத்தினால் பிரிந்துதினம் போர்க்கோலம் பல பூண்டு புதுப்பகை வளர்த்துமாந்தர்தம் நல்லுறவை சடுதியில் முறித்துநேர்மையின்றி…
ஒவ்வொரு தலைமுறையும்
தன் சொந்த வாழ்க்கையை நினைவுகூர
அவரது ஏதோவொரு பாடலை
கடன் வாங்கியது
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட…
கிளை நுனியில் ஊசலாடும்தூக்கணாங்குருவியின் பெருவீடு கண்டுவியப்புடன் வினவினாள் பேத்தி“கம்பியும் இல்லை, காரையும் இல்லை,எப்படி முடைந்தது இத்தகு பேரழகை?பட்டம் பயின்ற பொறியாளராலும்இப்படியோர் விந்தை இயலுமோ ?” மென்னகை புரிந்த நல்லாச்சிஇயற்கையின் அதிசயங்களில்இதுவுமொன்று என்றாள்;கூட்டுக்குள் மழைத்தூறல் நனைக்குமேஇரவானால் வெளிச்சத்திற்கு என்செய்யும்அசராமல் கேள்விகளை அடுக்குகிறாள் பேத்தி…