வான்திறந்து பெய்யாதோ விண்

கருமை சூழ் நள்ளிரவில் மாமழையின் மண்வாசம் வர
அறையின் சிறு அகல்விளக்கும் சுழற்காற்றினில் அல்லாட…
காரிருள் சோக நிழல் போர்த்திய காதலியின் நெஞ்சமது
நூலறுந்த பட்டம் போல் வேதனையில்
துடிதுடிக்க…

கண் மூட மறுக்கும் நொடியெல்லாம் காதலனின் நினைவு வாட்ட
விண்ணெட்டும் காதலது உள்ளுக்குள் வேதனையாய் வலிகள் தர…
தவிக்க விட்டுச் சென்றவனே காண மீண்டும் வரமாட்டாயா
சிரிக்கும் உன் மலர் சோலை வாடிய நிலை அறியமாட்டாயா…

தேனூறும் இதழ் சுவைத்து கள் பருகியவன் நீயன்றோ
வானேறி நிலவில் வந்துன் கவின் முகம் காட்டாயோ?
மீனினங்கள் விளையாடிடும் வெளியில்
நின் சாரல் வேண்டிக் காத்திருக்கிறேன்
வான்திறந்து பெய்யாதோ விண்

Author

  • கவிஞர் நளினி சுந்தரராஜன் வட அமெரிக்காவில் வசிக்கிறார். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதும் இவர், அமெரிக்காவில் தமிழ்ச்சங்கப்பேரவை, கவியரங்கங்கள் மற்றும் உலகத்திருக்குறள் மாநாட்டில் கவிதைகள் வாசித்திருக்கிறார். "Face in Face" இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல். "திக்குகளின் புதல்வியர், உறைபனி உதிர்த்த இறகு, வலசை சென்ற வண்ண மயில்கள்" ஆகிய தொகுப்பு நூல்களில் இவரது கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.

Related posts

அசுரவதம் – பாகம் 3: அத்தியாயம் 12: மதியூக மந்திரி

நீல நிலவு

கசியும் மெளனம்