முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ்

அது ஒரு பொற்காலம் – மங்கா நினைவுகள்

அந்தக் காலத்தில், இக்காலம் போல் ஆன்லைன் கிடையாது. ஆனால் ஆர்டர் செய்யாமலே, வேண்டிய பொருட்களை வீட்டு வாசலில் தள்ளுவண்டியிலோ சைக்கிளிலோ வாங்கலாம். காலை ஐந்து மணி முதல் கணகணவென பலவித மணியோசை. அதுதான் வீட்டுப்பெண்டிரின் அலாரம். “ஓ பால்காரர் வந்தாச்சு. இந்த…

Read more

இடும்பை

நவம்பர் மாதத்தின் அதீத மழையானது, இரவு முழுவதும் வெளுத்துவாங்கி காலை ஆறரை மணிவாக்கில் சற்றே வேகத்தைக் குறைத்திருந்தது. செல்லம்மாள் கல்லூரியிலிருந்து சின்னமலை நோக்கிச் செல்லும் அந்த அகலமான சாலையில், மெட்ரோ கான்ஃக்ரீட் பாலத்தின் மேலிருந்து ஆங்காங்கே அருவிபோல் மழைநீர் ஊற்றிக்கொண்டிருந்தது. பின்னால்…

Read more

உயிரோட்டத்தின் நகல்

இரயில்வே தண்டவாளத்திற்கு அருகேயிருந்த பழைய லட்சுமி தியேட்டர் பகுதியில் இன்று வணிக வளாகங்களால், முக்கியக் குடியிருப்புப் பகுதிகளால் நிறைந்திருக்கிறது. வாணி ஸ்வீட்ஸ், மூன்று நட்சத்திர ஹோட்டலான வெஸ்டன் கார்ட்ஸ், ஈபி ஆபிஸ், கணேச கந்தபெருமாள் கோவில் போன்றவை ஒரு புறம் வரவேற்க..…

Read more

புழுக்கள்

“ஏய் செல்வி, எங்க சால் எங்க போயிருக்கு? உன் சால் ஏன் அப்படியே இருக்கு? நாங்க போனதுல பாதி சால் கூட நீ ஏறல. இப்படியே நீ கொத்துனா என்னைக்கு எங்க கூட சாலு ஏறுறது? உன் கூட்டாளி வள்ளி… மொதல்ல…

Read more

வங்கிக்கடன்

சின்னாத்தாவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. தென்னங்கீற்றில் கூரை வேய்ந்த ஒன்றை குடிசை என்று சொல்வதே பொருத்தம் என்றாலும், அப்படிச் சொன்னால் நீங்கள் சின்னாத்தாவின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் அவளின் மண்சுவர் வசிப்பிடத்தை வீடு என்று சொல்லிவிடுவதே உத்தமம். அதுவும் இப்போது…

Read more

வேதாளக் கேள்வி

சில கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தாலும், நம்மால் சொல்ல முடிவதில்லை. அப்படித்தான் அமைந்தது, அன்று கண்ணகி என்னிடம் கேட்ட கேள்வியும். கண்ணகி, எங்கள் வீட்டுப் பணிப்பெண். நாங்கள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இவள்தான் வீட்டுவேலை செய்ய வருகிறாள். இவளது வேலை தினசரி…

Read more

கோடை மழை

கனகா அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து தோட்டத்தில் நின்றபடி பொன்னியை அலைபேசியில் கூப்பிட்டாள். “அக்கா, நான்தான்.. மணி ஏழரை ஆச்சுதேன்னு அவருக்குப் போன் செஞ்சேன். குரல் சரியா இல்லை.. நீங்க வந்து பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போறீங்களா?” கெஞ்சுகிற குரல். கண்களில் பிடிவாதமாய்த்…

Read more

துணிச்சல்காரியின் நடுக்கம்

அல்பாயுசில் போனஅப்பாவின் அஸ்தியைக்கரைத்ததோடு அகன்றதுசொந்த பந்தம் அழகியல் தொலைத்தஅம்மாவின் விழிகளுக்குள்உயிர்த்திருக்கிறது ஈன்ற மகவிற்குவிதி செய்யும் கனவு கனன்ற பாலைக்குள்பசுமை செய்த மந்திரக்காரிஇருண்மை வேய்ந்த கூரையில்வெளிச்சத் துகள்களைபரப்பிய மின்மினிக்காரி… மூச்சுப் பிடித்துஉழைக்கும் அவள் சிந்தைக்குள்சுழல்வது எல்லாம்மகவின் வளர்ச்சியே கொண்டை முடிந்தஅந்தப் போராட்டக்காரிபிள்ளையின் கல்யாணவைபவத்திலோ…

Read more

எளிதில்லை

பசியோடுஅழுதுகொண்டிருக்கிறதுபெயர் தெரியா குழந்தை,குடித்துவிட்டு மனைவியை அடித்துக்கொண்டிருக்கிறான் குடிகாரனொருவன்வீட்டுப்பாடம்எழுதிவிட்டேனென அம்மாவிடம் பாராட்டுவாங்கிக்கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி,உணவு கேட்டு வாசலில்நின்றுகொண்டிருக்கும் முதிர்ந்த யாசகிக்குஉணவோடுகுளிருக்கு போர்த்திக்கொள்ள உடையொன்றைஅளித்துக்கொண்டிருக்கிறாள் பெண்ணொருத்திவேலைக்குப் போன அப்பாவைக் கேட்டுதொந்தரவு செய்துகொண்டிருக்கிறான்ஒரு சிறுவன்மேகத்திற்குள் மறைந்த நிலவுவரும் வரை காத்திருந்துவந்த பிறகு பார்த்துக்கொண்டுவீட்டுக்குள் நுழைகிறார் ஒருவர்இன்பமும்…

Read more

கைவிடப்பட்ட கவிதை

எழுதத் தொடங்கிய அந்த இரவுஎன் பேனாவின் நுனியில்ஒரு பிரபஞ்சம் முளைத்துக்கொண்டிருந்தது முதல் வரி தாளின் வெண்மையில்வெற்றிடத்தில் ஒரு இதயத்துடிப்பு போன்றது இரண்டாவது வரிமழை மணம் போல மனமெங்கும் பரவியது மூன்றாவது வரி மட்டும்பிறக்கத் தயங்கிய குழந்தையாய்கருவறை இருளிலேயே நின்றுவிட்டது அதற்குள் வாழ்க்கைதன்…

Read more