Home கவிதைகலைவாணி கவிதைகள்

கலைவாணி கவிதைகள்

by Kalaivaani
0 comments

கொழுந்து வெயிலின்

நிழலினை

முகவாயேந்தி நெற்றிமுத்தமிடுகிறேன்.

அச்சிலிர்ப்பில் பிறக்கும் வலிமையினை

ஓர் நெடிய வரலாற்றின் மீதமர்ந்து

தூதெழுதுகிறேன்

இப்படியாக!

எனக்கு பாத்தியப்பட்ட

கடலின் பவளக் காடுகளை

துண்டாட நீளாத

நின் கரங்களுக்கு

எனது ரேகையில் கோர்த்தெடுத்த

நீர்துளியினை

அணிவிக்க காத்திருக்கிறேனெ!!

Author

You may also like

Leave a Comment