முகவுரை: தமிழகத்தில் கல்வி என்பது வெறும் அறிவு சார்ந்த விஷயமாக மட்டுமல்லாமல், சமூக அந்தஸ்து, பொருளாதார முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரத்திற்கான முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. “கல்வி ஒன்றே அழியாத செல்வம்” என்பதை ஆழமாக நம்பும் சமூகம் நம்முடையது. அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு …
பாலசாண்டில்யன், Balasandilyan
பாலசாண்டில்யன், Balasandilyan
எழுத்தாளர், கவிஞர், நூல் ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், கல்வி மற்றும் மனநல ஆலோசகர் எனப் பன்முகத் திறமைகள் கொண்ட இவர், இதுவரை கவிதை, கட்டுரை மற்றும் சிறுகதைகள் அடங்கிய 13 நூல்களை எழுதியுள்ளார். மேலும் 900-க்கும் மேற்பட்ட கவிதைகள், 40-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 450-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். இவரது 'நினைப்பது முடியும்' நூலுக்கு இலக்கியப்பீடம் அமைப்பு ரூபாய் 10,000 பொற்கிழியுடன் கூடிய விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது. அதுமட்டுமன்றி, 'புது வைரம் நீ உனக்கு' நூல் இலக்கியப்பீடம் விருதையும், இரு சுயமுன்னேற்ற நூல்கள் NRK விருதையும், 'வெற்றி ஒலி' நூல் 'கவிதை உறவின்' சிறந்த நூல் விருதையும் பெற்றுள்ளன. 'கலைமகள்' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் கி.வா.ஜ. சிறப்புப் பரிசு பெற்ற இவர், உரத்த சிந்தனை, கோதை அறக்கட்டளை, தங்கமீன் மற்றும் இலக்கியப்பீடம் அமைப்புகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும் பரிசுகளை வென்றுள்ளார். இவரின் எழுத்துப் பணிகளைப் பாராட்டி 'எழுத்துச்சுடர்', 'வித்யா ரத்னா', 'பல்கலைக் கலைஞர்' மற்றும் 'மனித நேய மாமணி' போன்ற கௌரவப் பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.