தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள் …
புதிய மாதவி, Pudhiya Madhavi
புதிய மாதவி, Pudhiya Madhavi
புதியமாதவி(மல்லிகா) (பிறப்பு: மார்ச் 17, 1956) மும்பையை வாழிடமாகக் கொண்ட தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், சமூகப் போராளி, அரசியல் விமர்சகர். மும்பைப் பெரு நகர வாழ்வை, மாறிவரும் பெண்களின் உலகத்தை, சமகால சமூக, அரசியல் நிகழ்வுகளை தன் படைப்புகளில் பதிவு செய்தார். மும்பையின் தமிழ் இலக்கிய முகமாகக் கருதப்படுகிறார். மும்பை தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான இலக்கியக் குரலாகவும், முதன்மையான பெண்ணியக் கவிஞராகவும் அறியப்படுகிறார். பல்வேறு அமைப்புகளில் இலக்கிய மற்றும் சமூகப் பங்களிப்புகளை முன்னெடுத்து ஒருங்கிணைத்து வருகிறார். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, மொழியாக்கம் மற்றும் புத்தக விமர்சனம் எனப் பன்முகத் தன்மையுடன் இயங்கி வருகிறார். மதச்சார்பின்மை, சுற்றுச்சூழல், பெண் மறுப்பு அரசியல் போன்ற சமகாலப் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் விமர்சனக் கட்டுரைகளை எழுதியுள்ளார். நகர வாழ்வின் நெருக்கடிகள், சமூக அரசியல் நிகழ்வுகள் மற்றும் பெண்ணியச் சிந்தனைகளைத் தனது படைப்புகளில் ஆழமாகப் பதிவு செய்யும் புதியமாதவி, தற்காலத் தமிழ் இலக்கியத்தின் ஒரு வலிமையான ஆளுமையாவார்.