1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு …
Author
ர.பா. இந்துமதி, R. P. Indhumathi
ர.பா. இந்துமதி, R. P. Indhumathi
ர.பா.இந்துமதி தென்காசியைச் சேர்ந்தவர். தற்போது கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்து வருகிறார். நவீனத் தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம். பல்வேறு சிற்றிதழ்களில் தொடர்ந்து கவிதைகளை எழுதி வருகிறார்.