விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, சமூகப் புறக்கணிப்பின் வேதனையான அனுபவங்களாக மாறுகின்றன. வறுமை என்பது வெறும் பொருளாதாரப் பற்றாக்குறை …
இதழ் – 6
திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத முடிக்கற்றையெனநுனிகளில் பிளந்து கிளைத்திருந்தன சிலஅக்கையொருத்தி கைபற்றிச்சேர்க்கவிழுது பற்றி ஆடிய பேத்திஅதே வீச்சில்பூமியை முத்தமிட்டுப் …
இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ என ஒலிப்பதாகவே இருந்தது இராவணனுக்கு. தழுவும் அலைகள், அவை சீதையின் கரங்களா என்று …
மருத்துவர் பக்கம் -9 : பக்கவாதம் – முன்னெச்செரிக்கையும் தீர்வும்
எனது நெருங்கிய நண்பர் , Dr. பிரதீப் MS., Mch ( Neurosurgery) ,சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் முதுநிலை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிந்து வருகிறார். அவரது ஆதங்கம் யாதெனில் இங்கு பக்கவாதம் வந்த பிறகு அதற்கு …
ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா கெடங்குதுங்க,நாளைக்கு நாத்துடறதுக்கு எறங்குனாவே ,சீசாக்கா ( கண்ணாடி பாட்டில்,கண்ணாடி பாட்டிலோட ஒடஞ்ச பாகங்கள்)எங்க …