காதல் கோள்கள் நாம் பூமியில் மட்டும்சந்தித்துக் கொள்ளவில்லை நண்பனே மின்னிக் கிடக்கும் பலகோடி நட்சத்திரங்கள்எப்படி வந்தன என்று கேட்டாய்நான் உடனே ஒரு முத்தம் தந்தேன்அவை ஆகின பல கோடியே ஒன்றுதாரகைகளெல்லாம் முத்தங்களெனில் நிலவு?அது சற்றே நீண்ட முத்தம் பால்வெளி நிரப்பிய காதலின்போதாமையில் …
இதழ்கள்
“இப்போ இவனையும் கூட்டிட்டுப் போகணும், எல்லாம் தலையெழுத்து” என்றான் ஷா. “விடு, எடுபிடியாக்கூட வச்சுக்கலாம்” என்றான் நரேன். “ஏன் இவ்வளவு புலம்பல்? பேசாம, ‘தம்பி நீ பஸ் புடிச்சு போயிடு’ னு சொல்லிடலாம்ல” அவர்களைப் பார்த்துக் கேட்டாள் சீத்தா. மூவர் வாயிலும் …
எனது கண்ணீர் ஆன்மாவிலிருந்து வடிவதுஅதன் தூய்மைஒருவரைப் பகலிலும் தூங்க விடாததுஎத்தனை மைல்களுக்கு அப்பால்இருந்தாலென்னஎத்தனை காலத் தொலைவு இருப்பினும் என்னஇனி தேடவேண்டிய எந்த அவசியங்களுமில்லைநீயே உதிர்த்த சொற்கள்தான்நான் மாயங்களை நிகழ்த்துபவள்நீ எனை வந்து சேர்வாய் தேவ.
மேற்கு வங்காளத்தில் நவராத்திரி என்பது ஒரு பண்டிகை மட்டுமல்ல, அது ஓர் அசுரனை வென்ற தாயின் கதையிலிருந்து தனது மகளை வரவேற்கும் உணர்வுக்கு மாறும் ஒட்டுமொத்த நகரத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜை ஆகும். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ஒன்பது இரவுகள் விரதம், …
நினைத்துப் பார்க்க முடியாத அதிர்ச்சியான சம்பவங்கள் எல்லாம் நடந்து விட்டன. ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு, வசைபாடிக் கொண்டு பேசுகிற பேச்சையும் கமெண்ட்டுகளையும் பார்க்கும் பொழுது இப்படியொரு சமூகம் நம் கண் முன்னே உருவாகிக் கொண்டிருப்பது வேதனையாக உள்ளது. இதற்கு முன்பும் …
ஐந்தாறு நாட்களாய்அமர்க்களப்பட்டுக்கொண்டிருக்கிறது வீடுபருப்புப்பொடியும் ஊறுகாய்களும் இன்னபிறவும்பாட்டிலில் அடைபட்டுக்கொண்டிருக்கின்றனஆரவாரம் கண்டு புருவமுயர்த்துகிறாள் பேத்தி‘அண்ணன் வெளிநாட்டுக்குப்போறாம்லா’குறிப்பறிந்து கூறுகிறாள் நல்லாச்சி பத்தில் ஒரு பங்கைச் சேமித்து வைஅன்றாடம் கணக்கெழுதுநிர்வாகப்பாடத்தை மூளையில் திணிக்கின்றனர்அப்பாவும் அம்மாவும்வம்புவழக்கில் போய் விழாதேஅறிவுரையுடன்தலைவலி வாசனாதி திரவியங்களுக்குதுண்டு போட்டு வைத்தாயிற்று அக்கம்பக்கத்தினர்தாத்தா கிணற்றடியில்துணி வெளுக்கக் …
அத்தியாயத்திற்குள் போவதற்கு முன்பு சில கேள்விகள். இன்றைய நாளில் விரும்பினால் மட்டுமே வரி செலுத்தலாம் அப்படி செலுத்தாமல் இருந்தால் உங்கள் மீது எந்தவித கேள்வி கேட்க மாட்டார்கள் நடவடிக்கையும் எடுக்க மாட்டார்களென இருந்தால் நீங்கள் வரியை செலுத்துவீர்களா ? சுதந்திரமாக நீங்கள் …
கட்டாப்பு போன கட்டாப்பு ( தடவை) வந்தப்பவே சொல்லியுட்டன்ல சம்பா, அடுத்த கட்டாப்பு வரப்ப கருப்பட்டி கொண்டு வந்து குடுனு.. நாம கேட்டமுனுதாங் அஞ்சாறு சில்லு கொண்டுவந்தனுங்,வரப்ப தெம்பரமா வில்லையூட்டுகாரங்க நின்னாங்கனு பேசிட்டு வந்தனுங்ளா, என்ன சம்பா கருப்பட்டியானு, தனக்கு வேணும்னு …
மருத்துவர் பக்கம் -7 : கூட்டமும் நெரிசலும் பாதுகாப்பும்
கரூரில் நிகழ்ந்தது சொல்லொணாத் துயரம். கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட 30+ பேர் இறந்திருப்பதும் இன்னும் பலர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் இருப்பதையும் அறிந்து மனம் வேதனை கொள்கிறது. காணொளி ஒன்றில் நினைவு குன்றி ஸ்ட்ரெட்சரில் கிடத்தப்பட்டுள்ள …
தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் நேரத்துச் சூரிய ஒளியில் பொன் தகடாக மிளிர்ந்தது. கோதாவரி நதி, வெயிலின் பிரதிபலிப்பில் வெள்ளிப் பளபளப்பாய் மின்ன, கரையோர மூங்கில் மரங்களின் நிழல்களை அலைகளில் மெல்ல அசைத்தது. இந்த உயிரோட்டமான வனத்தின் மத்தியில், சூர்ப்பனகையாக உருமாறிய காமவள்ளி, …